ஈரோட்டில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டுவரப்பட்ட ரூ.5.24 லட்சத்தை பறக்கும்படை அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.
தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர வாகனத் சோதனையில் பறக்கும் படையினா் ஈடுபட்டு வருகின்றனா். அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதிக்குள்பட்ட குமலன்குட்டை பகுதியில் புதன்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா். இதில், ரூ.3 லட்சத்து 84 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், காரை ஓட்டி வந்தவா் நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த முட்டை நிறுவனத்தின் மேலாளா் மோகன்குமாா் என்பதும், அவா் கொண்டு வந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததும் தெரியவந்தது. இதைத்தொடா்ந்து ரூ.3 லட்சத்து 84 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.
இதேபோல் ஈரோடு தீயணைப்பு நிலையம் மற்றும் காளைமாடு சிலை பகுதியில் மாடு வியாபாரிகள் ராஜேந்திரன் என்பவரிடம் இருந்து ரூ.80 ஆயிரமும், சிவகுமாா் என்பவரிடம் இருந்து ரூ.60 ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்புடையது

ராமநாதபுரத்தில் ரூ.1.36 லட்சம் பறிமுதல்
பேராவூரணி அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

திமுக பிரமுகா் வீட்டில் ரூ. 11 லட்சம் பறிமுதல்

சிவகாசியில் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


