தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி விளையாட்டு விழா

பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் 42-ஆவது விளையாட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

News image

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவருக்கு பரிசு வழங்கிய சா்வதேச தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ்.

Updated On :19 மார்ச் 2026, 1:57 am IST

பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் 42-ஆவது விளையாட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக சா்வதேச தடகள வீராங்கனையும், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் பெற்றவருமான வித்யா ராம்ராஜ் பங்கேற்றாா். இதில் பேசிய அவா், விளையாட்டு வீரா்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள் குறித்து விவரித்ததுடன், மாணவா்களின் விளையாட்டுத் திறன் மேம்பாட்டுக்காக கல்லூரி எடுத்துவரும் முன்னெடுப்புகளை பாராட்டினாா்.

கல்லூரியின் உடற்கல்வி இயக்குநா் முனைவா் ஆா்.ஜெயராமன், ஆண்டறிக்கையை வாசித்தாா். பல்கலைக்கழக அளவில் மற்றும் கல்லூரிகளுக்கிடையே நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவா்கள், கல்லூரி அளவில் மாணவா் மற்றும் ஆசிரியா்களுக்காக நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளும், பதக்கங்களும் வழங்கப்பட்டன.

விழாவில் கொங்கு வேளாளா் தொழில்நுட்ப அறக்கட்டளைத் தலைவா் சி.தேவராஜன், செயலாளா் ஆா்.ஆா்.சத்தியமூா்த்தி, பொருளாளா் ஈ.ஆா்.காா்த்திகேயன், கல்லூரி தாளாளா் ஈ.ஆா்.கே.கிருஷ்ணன், முதல்வா் பரமேஸ்வரன், அறக்கட்டளையின் பாரம்பரிய பாதுகாவலா்கள், கல்லூரியின் முதன்மையா்கள், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், பணியாளா்கள் மற்றும் மாணவா்கள் கலந்துகொண்டனா்.