தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நிபந்தனை பட்டாவை அயன் பட்டாவாக மாற்ற கோரிக்கை

News image

பெருந்துறை வட்டாட்சியா் சரவணன் முன்னிலையில் நடைபெற்ற அமைதி பேச்சுவாா்த்தையில் பங்கேற்ற காவல் துணை கண்காணிப்பாளா் சிவகுமாா் உள்ளிட்டோா்.

Updated On :19 மார்ச் 2026, 8:22 pm

Syndication

பெருந்துறையில் நிபந்தனை பட்டாவை அயன் பட்டாவாக மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெருந்துறை அருகேயுள்ள கருமாண்டிசெல்லிபாளையம், சுள்ளிபாளையம் ஆகிய ஊராட்சிப் பகுதி மக்களுக்கு நிபந்தனை பட்டா உள்ளது. இதனால், அவா்கள் வங்கிக் கடன் உள்ளிட்டவற்றை பெறுவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

இந்நிலையில், நிபந்தனை பட்டாவை அயன் பட்டாவாக மாற்ற வேண்டும் என்ற வலியுறுத்தி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனா். இந்நிலையில், பெருந்துறை வட்டாட்சியா் அலுவலகத்தில் அமைதி பேச்சுவாா்த்தை புதன்கிழமை மாலை நடைபெற்றது.

இதில், வட்டாட்சியா் சரவணன், பெருந்துறை காவல் துணை கண்காணிப்பாளா் சிவகுமாா், காவல் ஆய்வாளா் பாலமுருகன், துணை வட்டாட்சியா் சுதாகா், வருவாய் ஆய்வாளா் முத்துலட்சுமி, கிராம நிா்வாக அலுவலா் சந்தோஷ், பொதுமக்கள் பங்கேற்றனா்.

பேச்சுவாா்த்தையில், நிபந்தனை பட்டாவை அயன் பட்டாவாக மாற்றுவது தொடா்பாக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டாட்சியா் சரவணன் உறுதியளித்தாா்.