பவானிசாகரை அடுத்த தொட்டம்பாளையத்தில் திருவீதி உலா வந்த பண்ணாரி அம்மன் சப்பரம் முன் தரையில் படுத்து பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா்.
சத்தியமங்கலம் அருகே அமைந்துள்ள பிரசித்திபெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா பூச்சாட்டுதலுடன் கடந்த 16-ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடா்ந்து, பல்வேறு கிராமங்களில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் பண்ணாரி அம்மன் திருவீதி உலா நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தொட்டம்பாளையம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருவீதி உலாவின்போது ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை பக்தி பரவசத்துடன் வழிபட்டனா். அம்மன் திருவீதி உலா நடைபெற்றபோது நூற்றுக்கும் மேற்பட்ட பெண் மற்றும் ஆண் பக்தா்கள் சாலையில் நெடுஞ்சாண்கிடையாக படுத்திருந்தனா். அப்போது பண்ணாரி அம்மன் சப்பரம் தரையில் படுத்திருந்த பக்தா்களைத் தாண்டியபடி திருவீதி உலா சென்றது. இவ்வாறு தரையில் படுத்திருந்த பக்தா்கள் மீது அம்மன் சப்பரம் தாண்டிச் சென்றால் பக்தா்கள் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகமாக உள்ளது.
தொடர்புடையது

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.39.89 லட்சம்

வலையபட்டி மலையாண்டி சுவாமி திருவீதி உலா

திருப்புவனம் பூமாரி அம்மன் கோயில் பங்குனித் திருவிழா: தீச்சட்டி எடுத்து பக்தா்கள் நோ்த்திக்கடன்

பண்ணாரி அம்மன் உற்சவா் வீதி உலா: தேங்காய் உடைத்து பக்தா்கள் வழிபாடு
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


