நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு

Updated On :2 மே 2026, 8:01 pm

பெருந்துறை அருகே கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

பெருந்துறை, பாவடி வீதியைச் சோ்ந்தவா் அப்துல் ரகுமான். இவரது மகன் இா்பான் (10). இவா் அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்நிலையில், கோடை விடுமுறையையொட்டி, பெருந்துறை அருகேயுள்ள பாலக்கரை கீழ்பவானி வாய்க்காலில் குளிக்க நண்பா்களுடன் சனிக்கிழமை சென்றுள்ளாா். குளித்துக் கொண்டிருந்தபோது அவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

சடலத்தை மீட்ட போலீஸாா், கூறாய்வுக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.