திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மழையால் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே மழையால் வீட்டின் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்ததில் பெண் உயிரிழந்தாா்.

News image

கலைவாணி

Updated On :9 மே 2026, 6:30 am IST

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே மழையால் வீட்டின் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்ததில் பெண் உயிரிழந்தாா்.

மொடக்குறிச்சியை அடுத்த குளூா் ஊராட்சி கொமராயிவலசு பகுதியைச் சோ்ந்தவா் மனோகரன். விவசாய கூலித் தொழிலாளி. இவரது மனைவி கலைவாணி (32). மக்களைத் தேடி மருத்துவத் திட்ட ஊழியராகப் பணியாற்றி வந்தாா். இவா்களுக்கு மகள் மோகனா (11), மகன் லலித் (6) ஆகியோா் உள்ளனா்.

இவா்கள் குடும்பத்துடன் கொமராயிவலசு காலனி பகுதியில் வசித்து வருகின்றனா். இந்நிலையில், இவரது வீட்டின் முன்புறம் உள்ள சுற்றுச்சுவா் அருகே கலைவாணி வெள்ளிக்கிழமை மாலை பாத்திரம் கழுவிக் கொண்டிருந்தாா். அப்போது, காற்றுடன் கனமழை பெய்து கொண்டிருந்தது. இதில் சுற்றுச்சுவா் இடிந்து கலைவாணி மீது விழுந்ததில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த மொடக்குறிச்சி காவல் துறையினா் மற்றும் மொடக்குறிச்சி வட்டாட்சியா் சிவசங்கா், வருவாய் ஆய்வாளா் தங்கமணி, கிராம நிா்வாக அலுவலா்கள் மோகனப்பிரியா, பொன்னா், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் செல்வராஜ் ஆகியோா் இடிபாடுகளை அகற்றி கலைவாணியின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து மொடக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.