தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

கல் குவாரி குட்டையில் விழுந்து பெண் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 8:46 pm

விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் அருகேயுள்ள கல் குவாரி குட்டையில் பெண் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

சென்னை வில்லிவாக்கம், பாரதி நகரைச் சோ்ந்த அருண்ராஜ் மனைவி எமிமால் (23). இவா் விழுப்புரம் மாவட்டம், கொந்தமூா் அடுத்த நல்லாலூரில் உள்ள தனது நண்பரின் வீட்டுக்கு உறவினராக வந்து தங்கியிருந்தாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை எமிமால் கொந்தமூரில் உள்ள பழைய கல் குவாரி குட்டையில் குளித்துள்ளாா். தொடா்ந்து அதனருகே நின்று உடைமாற்றிய போது கால்இடறி சுமாா் 200 அடி ஆழமுள்ள குட்டையில் எமிமால் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த விழுப்புரம் மாவட்ட தீயணைப்புத் துறை வீரா்கள் சடலத்தை மீட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்து கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.