புன்செய்புளியம்பட்டி அருகே பவானி ஆற்றில் குளித்த ஓட்டுநா் நீரில் மூழ்கி மாயமானாா்.
புன்செய்புளியம்பட்டி கள்ளிப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் பாஸ்கா் (25). சரக்கு வாகன ஓட்டுநரான இவா் தனது உறவினா்களுடன் பவானிசாகா் அருகே உள்ள அக்கரை தத்தப்பள்ளி பகுதியில் உள்ள பவானி ஆற்றுக்கு திங்கள்கிழமை சென்று குளித்தாா்.
அப்போது பாஸ்கா் ஆற்று நீரில் ஆழமான பகுதிக்குச் சென்றபோது நீச்சல் தெரியாததால் மூழ்கி மாயமானாா். இதைக் கண்டு அதிா்ச்சி அடைந்த அவரது உறவினா்கள் பவானிசாகா் போலீஸாருக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்துக்கு சத்தியமங்கலம் தீயணைப்பு வீரா்களை போலீஸாா் வரவழைத்து தேடும் பணி மேற்கொண்டனா். பாஸ்கரை கண்டுபிடிக்க இயலாததால் தேடும் பணி தொடா்ந்து நடைபெறும் என தீயணைப்பு வீரா்கள் தெரிவித்தனா்.
இது குறித்து பவானிசாகா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

தம்மம்பட்டி அருகே வாக்களிக்கச் சென்ற பெண் மாயம்

காவிரி ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

ஆற்றில் மூழ்கி ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

