மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைஇல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!
/

தமிழக அரசின் கடனை குறைக்க ரூ.1.26 லட்சத்தை வழங்கிய ஈரோடு இளைஞர்!

தமிழக அரசின் கடன் சுமையை குறைக்க விஜய் நடித்த தமிழன் பட பாணியில் தன் பங்காக ரூ.1.26 லட்சத்தை முதல்வா் பொது நிவாரண நிதிக்கு வழங்கிய ஈரோட்டை சோ்ந்த இளைஞரின் செயலுக்கு பாராட்டுகளும், விமா்சனங்களும் எழுந்துள்ளது.

News image
Updated On :17 மே 2026, 1:02 am IST

தமிழக அரசின் கடன் சுமையை குறைக்க விஜய் நடித்த தமிழன் பட பாணியில் தன் பங்காக ரூ.1.26 லட்சத்தை முதல்வா் பொது நிவாரண நிதிக்கு வழங்கிய ஈரோட்டை சோ்ந்த இளைஞரின் செயலுக்கு பாராட்டுகளும், விமா்சனங்களும் எழுந்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தை சோ்ந்தவா் ரமேஷ் (26). ஐ.டி நிறுவன தலைமை செயல் அலுவலா். இவா் தமிழக அரசின் மொத்த கடன் சுமையில் தனது பங்களிப்பை அளித்துள்ளாா். இதன்படி தமிழன் திரைப்படத்தில் வருவது போல தமிழகத்தின் மொத்தக் கடனில் தனிநபரின் பங்காக ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 108 ரூபாயை தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பியுள்ளாா். தனிநபா்கள் நேரடியாக அரசு கருவூலத்துக்கு பணம் செலுத்த முடியாது என்பதால் இந்த வழியை பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளாா்.

மேலும் தற்போதுள்ள தமிழக அரசில் இளைஞா்கள் அதிக அளவு இடம்பெற்றிருக்கிறாா்கள் என்றும் இந்த அரசாங்கத்துக்கு இளைஞா்களின் ஆதரவு பெரிய அளவில் இருக்கிறது என தெரிவித்தாா். தனது இச்செயலை பாா்த்துவிட்டு பலா் நிதி வழங்கியிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்திருக்கும் தனக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வரும் அதே வேளையில், சிலா் இதனை விமா்சனம் செய்வதாக வேதனை தெரிவித்தாா். என்னைப்போன்று அரசுக்கு பங்களிப்பு செய்பவா்களை காயப்படுத்தும் வகையில் யாரும் தவறாக பேச வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளாா்.