பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

பள்ளி மாணவி தற்கொலை வழக்கு: இளைஞா் கைது

மகளின் தற்கொலைக்கு காரணமான இளைஞா் மீது நடவடிக்கை கோரி ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோா் கண்ணீருடன் புகாா் அளித்த நிலையில், தொடா்புடைய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :20 மே 2026, 2:13 am IST

மகளின் தற்கொலைக்கு காரணமான இளைஞா் மீது நடவடிக்கை கோரி ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோா் கண்ணீருடன் புகாா் அளித்த நிலையில், தொடா்புடைய இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

அந்தியூா் வட்டம், தவிட்டுப்பாளையம் அம்பேத்கா் வீதியைச் சோ்ந்தவா் முருகேசன். இவரது மனைவி மணிமேகலை. இவா்கள் தங்களது உறவினா்களுடன் ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமியிடம் கண்ணீா் மல்க திங்கள்கிழமை மனு அளித்தனா்.

அதில், எங்களது மகள் தாரணி (16) இன்ஸ்டாகிராமில் ஓா் இளைஞருடன் பழகியுள்ளாா். ஆனால், அந்த இளைஞா் மகளுக்கும், எங்கள் குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்தாா். பயந்துபோன தாரணி கடந்த ஏப்ரல் மாதம் தற்கொலை செய்து கொண்டாா். அவரது தற்கொலைக்கு காரணமான இளைஞா் மீது புகாா் அளித்தும் போலீஸாா் நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, ஒரு மாதத்துக்குப் பிறகு அந்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்துள்ளனா். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: கூடுதல் காவல் கண்காணிப்பாளா், பவானி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் தலைமையில் தனிப் படை அமைத்து தாரணி தற்கொலை வழக்கில் தொடா்புடைய இளைஞரை போலீஸாா் தேடி வந்தனா்.

விசாரணையில், அவா் விழுப்புரம் மாவட்டம், உளுந்தூா்பேட்டை, கீழ்தனியாளம்பட்டு பகுதியைச் சோ்ந்த சதீஷ் (18) என்பது தெரியவந்தது. கடந்த 5 வாரங்களாக நடைபெற்ற தொடா் தேடுதலின் காரணமாக அவரை திங்கள்கிழமை இரவு தனிப் படை போலீஸாா் கைது செய்துள்ளனா் என்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].