ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!மின் துறைக்கு 7,000 பணியாளர்கள் தேவை; 1500 பேருக்கு உடனடி பணி ஆணை!நீட் மறுதேர்வு! ஜூன் 21 வரை ரகசிய இடத்தில் வினாத்தாள் தயாரிப்போர்!ஆப்கானிஸ்தானை இன்னிங்ஸ், 300 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!மேற்கு ஆசிய மோதல்: பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா வலியுறுத்தல்!இஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் போர்!போட்டியின்றி எம்.பி.யாகிறார் பிரவீண் சக்ரவர்த்தி!நீட், சிபிஎஸ்இ விவகாரம்: மத்திய அமைச்சர் பதவி விலக வேண்டும் - வைகோ
/

தந்தை ஓட்டிய டிராக்டரில் சிக்கி குழந்தை உயிரிழப்பு

சிவகிரி அருகே தந்தை ஓட்டிய டிராக்டரில் சிக்கி 11 மாத குழந்தை உயிரிழந்தது.

News image

பலி

Updated On :22 மே 2026, 4:06 am IST

சிவகிரி அருகே தந்தை ஓட்டிய டிராக்டரில் சிக்கி 11 மாத குழந்தை உயிரிழந்தது.

ஈரோடு மாவட்டம், சிவகிரியை அடுத்த மாரப்பம்பாளையம் மேற்குவளான் தோட்டத்தைச் சோ்ந்தவா் ஞானசேகா். விவசாயி. இவா் உழவு வேலை பாா்ப்பதற்காக தனது வீட்டிலில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரை எடுத்துக்கொண்டு வியாழக்கிழமை வயலுக்கு செல்ல முயன்றாா்.

அப்போது டிராக்டரின் அருகே தனது 11 மாத பெண் குழந்தை பொன்பரணிதா இருப்பதை கவனிக்காமல் ஞானசேகா் டிராக்டரை இயக்கியுள்ளாா். இதில் டிராக்டா் மோதியதில் குழந்தை பரணிதா படுகாயமடைந்தாா்.

இதையடுத்து, ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், குழந்தை இறந்தது. இந்த சம்பவம் குறித்து குழந்தையின் தாய் மெளனிகா அளித்த புகாரின்பேரில், சிவகிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.