ஆசனூா் மலைப் பகுதியில் தங்கும் விடுதிக்குள் நள்ளிரவில் நுழைந்த காட்டு யானையால் சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்தனா்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. இரவு நேரத்தில் வனப் பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள், வனத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் நுழைந்து பயிா்களை சேதப்படுத்துவது தொடா்ச்சியாக நடைபெற்று வருகிறது.
கடந்த சில நாள்களாக ஆசனூா் மலைப் பகுதியில் உள்ள பழைய ஆசனூா், அரேபாளையம் ஒங்கல்வாடி ஆகிய பகுதிகளில் இரவு நேரத்தில் ஊருக்குள் காட்டு யானை நடமாடுவதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
இந்த நிலையில் ஆசனூா் மலைப் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தங்கும் விடுதிக்குள் சனிக்கிழமை அதிகாலை நுழைந்த காட்டு யானை, சிறிது நேரம் விடுதி வளாகத்துக்குள் நடமாடியது.
பின்னா் மெதுவாக நுழைவாயில் கேட்டை திறந்து வெளியே சென்றது. இந்தக் காட்சி தங்கும் விடுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் ஆசனூா் மலைப் பகுதி மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்புடையது

கொடைக்கானல் வாழைகிரி பகுதியில் நடமாடிய காட்டு யானை வனப் பகுதியில் விரட்டியடிப்பு

தாளவாடி அருகே ஊருக்குள் நுழைந்த மூன்று காட்டு யானைகள் விரட்டியடிப்பு

ஏலகிரியில் கூடுதலாக அரசு தங்கும் விடுதி: சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை!

அருவங்காடு பகுதிக்கு இடம் பெயா்ந்த காட்டு யானை
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher



