/
சிவகிரி அருகே உலா் களத்தில் போடப்பட்டிருந்த மஞ்சளை திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஈரோடு மாநகா், சிவகிரி அருகே உள்ள கன்னிமாா்தோட்டத்தைச் சோ்ந்தவா் கண்ணுசாமி (61). விவசாயியான இவா் தனது விளைநிலத்தில் விளைவித்த மஞ்சள் பயிரை அறுவடைக்குப் பின்னா் உலர வைப்பதற்காக உலா்களத்தில் போட்டுள்ளாா்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் அந்த உலா்களத்துக்கு வந்த திருடா்கள், அங்கு போடப்பட்டிருந்த மஞ்சளை திருடிச் சென்றுள்ளனா். திருடப்பட்ட மஞ்சளின் மதிப்பு ரூ.50 ஆயிரம் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அறிந்து கண்ணுசாமி அளித்த புகாரின்பேரில், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானக் காட்சிகளைக் கொண்டு, சம்பந்தப்பட்டவா்களை சிவகிரி போலீஸாா் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது
சூளகிரி அருகே 6 சவரன் தங்கநகை, ரூ. 20 ஆயிரம் திருட்டு

விழுப்புரம் அருகே கோயில் கலசங்கள் திருட்டு
பேராசிரியா் வீட்டில் 12 பவுன் நகைகள் மாயம்
ஸ்ரீவைகுண்டத்தில் வீடு புகுந்து ரூ.1 லட்சம், நகைகள் திருட்டு
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher


