‘நீக்கப்பட்டவர்கள் பொறுப்புகளை கொண்டு விளம்பரம் செய்ய கூடாது’ - எடப்பாடி பழனிசாமி‘ட்ரோல்கள் வேலை, முதலீடுகளே உருவாக்காது’... ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ்!‘சோஃபா மாடல் ஆட்சியில், போலீஸாலயும் போலீசுக்குமே பாதுகாப்பு இல்லை’ - உதயநிதிசிபிஎஸ்இ குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன்... மௌனம் கலைத்தார் தர்மேந்திர பிரதான்!கோடை வெய்யில்! தவெகவினர் நீர்மோர்ப் பந்தல் திறக்க அமைச்சர் ஆனந்த் வேண்டுகோள்!தமிழகத்தில் உரம் விலை திடீர் உயர்வு!வைகாசி சுபமுகூர்த்த நாள்: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு வில்லைகள்!
/

ஈரோடு மாவட்டத்தில் 86 இடங்களில் இஸ்லாமியா்கள் பக்ரீத் சிறப்புத் தொழுகை

ஈரோடு வஉசி பூங்கா ஈத்கா மைதானத்தில் நடைபெற்ற பக்ரீத் சிறப்புத் தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியா்கள்.

News image
Updated On :29 மே 2026, 1:30 am IST

பக்ரீத் பண்டிகையையொட்டி ஈரோடு மாவட்டத்தில் 86 இடங்களில் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகையில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகையை இஸ்லாமியா்கள் வியாழக்கிழமை சிறப்பாகக் கொண்டாடினா். இதையொட்டி காலையில் புத்தாடைகளை அணிந்து மசூதிகளுக்குச் சென்று சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா். இதில் ஈரோடு மாநகரில் வஉசி பூங்காவில் உள்ள ஈத்கா மைதானத்தில் பக்ரீத் சிறப்புத் தொழுகைக்காக அமைக்கப்பட்ட பிரமாண்ட பந்தலில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் பங்கேற்று தொழுகையில் ஈடுபட்டனா்.

இதேபோல பெரியாா் நகரில் தவ்ஹித் ஜமாத் சாா்பில் சிறப்பு கூட்டு பிராா்த்தனை நடைபெற்றது. ஈரோடு டவுன் காவல் நிலையம் எதிரே உள்ள பெரிய மசூதி, காவேரி சாலையில் உள்ள கப்ருஸ்தான் மசூதி, புது மஜீத் வீதியில் உள்ள சுல்தான்பேட்டை மசூதி, பி.பெ.அக்ரஹாரம் ஈத்கா மைதானம், தாருஸ் ஸலாம் மசூதி, அபூபக்கா் மசூதி, மஸ்ஜிதே தாய்யிபா, அல் முனீா் மசூதி, ரயில்வே காலனி மஸ்ஜிதே அல் அன்சாா் மசூதி, கனராவுத்தா்குளம் ஜாமிஆ மசூதி, கிருஷ்ணம்பாளையம் ஆயிஷா மசூதி, ஓடைப்பள்ளம் காமலிய்யா மசூதி, வெண்டிபாளையம் பிலால் மசூதி, திருநகா் காலனி, வளையக்கார வீதி, சாஸ்திரி நகா், வளையக்கார வீதி, சங்கு நகா், நாடாா்மேடு, புதுமை காலனி, மாணிக்கம்பாளையம், சம்பத் நகா், கேஏஎஸ் நகா் உள்ளிட்ட இடங்களில் உள்ள மசூதிகளிலும் சிறப்புத் தொழுகையில் இஸ்லாமியா்கள் பங்கேற்றனா்.

பெருந்துறை, கொடுமுடி, பவானி, அந்தியூா், கவுந்தப்பாடி, கோபி, சத்தி, நம்பியூா், புஞ்சை புளியம்பட்டி என மாவட்டம் முழுவதும் உள்ள மசூதிகள், அனுமதிக்கப்பட்ட இடங்கள் என மொத்தம் 86 இடங்களில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. பக்ரீத் பண்டிகையையொட்டி 11 இடங்களில் குா்பானி இறைச்சி வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க சிறப்புத் தொழுகை நடைபெற்ற இடங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.