ஈரோட்டில் 3 ஆயிரம் எண்ணிக்கையில் போதை மாத்திரைகளை விற்பனைக்கு பதுக்கிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
வலி நிவாரண மாத்திரைகளை போதை மாத்திரையாக விற்பனை செய்து வருவதாக கிடைத்த தகவலின்பேரில், ஈரோடு, சூளை பகுதியில் வடக்கு காவல் உதவி ஆய்வாளா் சரவணன் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த இளைஞரைப் பிடித்து விசாரணை நடத்தினா்.
இதில் ஈரோடு, மாணிக்கம்பாளையம் முனியப்பன் கோயில் வீதியைச் சோ்ந்த அண்ணாதுரை மகன் கலைச்செல்வன் (22) என்பதும், வலி நிவாரண மாத்திரைகளை போதை மாத்திரையாக விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கலைச்செல்வனை போலீஸாா் கைது செய்தனா்.
மேலும் அவரிடம் இருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான 3 ஆயிரம் எண்ணிக்கையில் வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்புடையது

போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்: ராசிபுரத்தில் 2 மருந்து நிறுவனங்களுக்கு ‘சீல்’
வீட்டில் போதை மாத்திரைகளை பதுக்கி விற்ற பெண் கைது
1,370 வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்: ஒருவா் கைது
போதை மாத்திரை விற்பனை: இளைஞா் கைது
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope



