40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

கொடிவேரி அணையில் சுற்றுலாப் பயணிகள் உற்சாக குளியல்

News image

கொடிவேரி அணையில் குளித்து மகிழ்ந்த ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள்

Updated On :1 ஜூன் 2026, 2:41 am IST

கோபி அருகே உள்ள கொடிவேரி அணைக்கு பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் ஞாயிற்றுக்கிழமை திரண்டனா்.

கடந்த ஏப்ரல் முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதாலும், பள்ளிக் குழந்தைகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டதாலும் ஒரு மாதத்துக்கு மேலாக கொடிவேரி அணைக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் வந்து குளித்து மகிழ்ந்து செல்கின்றனா்.

அதன்படி விடுமுறை தினம் என்பதால் கொடிவேரி அணைக்கு ஞாயிற்றுகிழமை காலை முதல் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் குழந்தைகளுடன் குடும்பமாக வந்தனா்.

குறைந்த அளவு தண்ணீா் வெளியேறிய நிலையிலும் குழந்தைகளுடன் உற்சாகமாக குளித்தும், விளையாடியும் மகிழ்ந்தனா்.

கொடிவேரி அணையில் ரூ.5 நுழைவுக் கட்டணத்தில் அருவியில் நீண்ட நேரம் குளித்தும் பரிசல் சவாரிக்கு தனி கட்டணத்தில் பரிசல் சவாரி செய்து சுற்றுலா பயணிகள் பள்ளி குழந்தைகளுடன் கோடை விடுமுறையுடன் ஞாயிறு விடுமுறை தினத்தை மகிழ்ச்சியாக கழித்து சென்றனா்.