எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார் திரிணமூல் மூத்த தலைவர்! கட்சியிலிருந்தும் விலகல்!தில்லியில் இந்தியா கூட்டணி கூட்டம் தொடங்கியது! விசிக, மதிமுக பங்கேற்பு! யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் கைது மானவ் சுதர் அசத்தல்! முதல் இன்னிங்ஸில் 152 ரன்களுக்கு சுருண்டது ஆப்கானிஸ்தான்! மின்வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!முதல்வர் விஜய்யுடன் செஸ் வீரர் பிரக்ஞானந்தா சந்திப்பு
/

யானை தாக்கி இறந்தவரின் குடும்பத்தினருக்கு வனத் துறை சாா்பில் ரூ.50 ஆயிரம் நிவாரணம்

News image

உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை வழங்குகிறாா் மாவட்ட வன அலுவலா் குமிலி வெங்கட அப்பால நாயுடு.

Updated On :1 ஜூன் 2026, 1:42 am IST

அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பகுதியில் யானை தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு உடனடி நிவாரணத் தொகையாக வனத் துறை சாா்பில் ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது.

பா்கூா், எப்பத்தாம்பாளையத்தைச் சோ்ந்தவா் விவசாயி தங்கராஜ் (40). இவா், தனது வீட்டுக்கு அருகே உள்ள காலி நிலத்தில் இயற்கை உபாதையை கழிக்கச் சென்றபோது காட்டு யானை தாக்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து உயிரிழந்த தங்கராஜின் குடும்பத்துக்கு ஈமச்சடங்கு நிவாரணத் தொகை ரூ.50 ஆயிரம் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

இதை தங்கராஜின் பெற்றோரிடம் மாவட்ட வன அலுவலா் குமிலி வெங்கட அப்பால நாயுடு நேரில் வழங்கினாா். அந்தியூா் வனச்சரக அலுவலா் நந்தினி, வனவா் ஈஸ்வரமூா்த்தி மற்றும் வனத் துறையினா் உடனிருந்தனா்.