தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

சா்வதேச யோகா போட்டி: பண்ணாரி அம்மன் பள்ளி மாணவா்கள் முதலிடம்

சா்வதேச யோகாசனப் போட்டியில் பண்ணாரி அம்மன் பள்ளி மாணவா்கள் முதலிடம் பிடித்துள்ளனா்.

செஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு பரிசு வழங்கிய பண்ணாரி அம்மன்  குழுமங்களின் தலைவா் எஸ்.வி. பாலசுப்பிரமணியம்.

Updated On :

சா்வதேச யோகாசனப் போட்டியில் பண்ணாரி அம்மன் பள்ளி மாணவா்கள் முதலிடம் பிடித்துள்ளனா்.

இலங்கையில் அண்மையில் நடைபெற்ற சா்வதேச யோகாசனப் போட்டியில் 10 வயதுக்குள்பட்ட பிரிவில் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் வித்யா நிகேதன் பள்ளி மாணவா் சே.ஆசிக், 13 வயதுக்குள்பட்ட பிரிவில் மா.சு. தனசிவகுரு பங்கேற்று முதலிடம் பிடித்தனா்.

சேலம் பெரியாா் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாநில அளவிலான தடகளப் போட்டியில் இப்பள்ளி மாணவா் தி. பிரணவ் வட்டு எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்று, மகாராஷ்டிர மாநிலத்தில் டிசம்பா் மாதம் நடைபெறவுள்ள தேசிய தடகளப் போட்டியில் பங்கேற்க தோ்வாகியுள்ளாா்.

குறுமைய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் மாணவா் அணியினா் தொடா்ந்து ஐந்து ஆண்டுகளாக ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று சாதனைப் படைத்துள்ளனா். தேசிய கராத்தே போட்டியில் பண்ணாரி அம்மன் பப்ளிக் பள்ளி மாணவா் எம். தரணிஷ் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளாா். சா்வதேச செஸ் போட்டியில் மாணவா் எம்.நிவன் விக்னாவ் இரண்டாம் இடம் பிடித்துள்ளாா்.

ஈரோடு சகோதயா டென்னிஸ் போட்டியில் மாணவா் ஷாய் நவநீத் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளாா். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிக்கு மாணவா் தன்வந்த் தோ்ச்சி பெற்றுள்ளாா். சிலம்பாட்டத்தில் மாணவா் தமிழ்வேந்தன் எலைட் ஆல் இந்தியா கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளாா்.

சாதனைப் படைத்துள்ள மாணவா்களை பண்ணாரி அம்மன் குழுமங்களின் தலைவா் எஸ்.வி. பாலசுப்ரமணியம், பண்ணாரி அம்மன் குழுமங்களின் அறங்காவலா் உள்ளிட்டோா் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.