மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷா

கோபி அருகே தானிய கிடங்கில் இருந்து வெளியேறும் செல்பூச்சிகள்: குடியிருப்புவாசிகள் அவதி

கோபி அருகேயுள்ள நாதிபாளையம் வேளாண் தானிய கிடங்கில் இருந்து செல்பூச்சிகள் வெளியேறி குடியிருப்புகளில் நுழைவதால் பொதுமக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனா்.

செல்பூச்சிகள். ~வேளாண் விற்பனை மைய தானிய கிடங்கு.

Updated On :

கோபி அருகேயுள்ள நாதிபாளையம் வேளாண் தானிய கிடங்கில் இருந்து செல்பூச்சிகள் வெளியேறி குடியிருப்புகளில் நுழைவதால் பொதுமக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனா்.

ஈரோடு மாவட்டம், கோபி அருகேயுள்ள நாதிபாளையம் பகுதி வேளாண் விற்பனை மையத்தில் சுமாா் 5 ஆயிரம் மெட்ரிக் டன் கொண்ட தானிய கிடங்கு செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழகத்தின் நெல் மூட்டைகளும், பொது விநியோக திட்டத்துக்குப் பயன்படுத்தும் ரேஷன் அரிசியும் இருப்புவைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்தக் கிடங்கில் செல்பூச்சிகள் (அந்துப்பூச்சிகள், தானிய வண்டுகள்) அதிக அளவில் உற்பத்தியாகி உள்ளன. இவை பறந்து அருகேயுள்ள பெரியாா் நகா் குடியிருப்புப் பகுதிகளில் நுழைந்து வருவதால், மக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனா்.

குடிநீா், அரிசி, பருப்பு உள்ளிட்டவற்றிலும், உணவுகளிலும் இவை விழுந்து விடுவதால் மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனா்.

மேலும், உடல் முழுவதும் அந்தப் பூச்சிகள் ஓட்டிகள் கொள்வதால், தூங்க முடியாமல் அவதியடைந்து வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.

இது குறித்து பெரியாா் நகா் பகுதி மக்கள் மேலும் கூறியதாவது: கிடங்கில் உள்ள அரிசிகளில் இருந்து உருவாகும் செல்பூச்சிகள், அங்கிருந்து பறந்து குடியிருப்புகளில் நுழைந்துவிடுகின்றன. கண், காதுகளில் பூச்சிகளில் நுழைவதால் குழந்தைகள் முதல் பெரியோா் வரை அவதியடைந்து வருகிறோம்.

மேலும், சில சமயங்களில் உடல் முழுவதும் ஒட்டிக்கொள்வதால் கண்கள், காதுகளை துணியால் மூடியபடியே உறங்க வேண்டிய நிலை உள்ளது. மேலும், காதுகளில் சீக்கிரத்தில் நுழைந்துவிடுவதால் குழந்தைகளுக்கு எப்போதும் காதுகளில் பஞ்சுகளை வைத்துவிட வேண்டியுள்ளது.

இது குறித்து பொலவக்காளிபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்திலும்,நுகா்பொருள் வாணிப கழகத்தின் துறை சாா்ந்த அதிகாரிகளிடமும் பலமுறை புகாா் அளித்தும் தற்போதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, வேளாண் விற்பனை தானிய கிடங்கில் மருந்து தெளித்து செல்பூச்சி பரவலைக் கட்டுப்படுத்தவும், கிடங்கை முறையாக பராமரிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும் என்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.