இரண்டாவது முறையாக ஐசிசியின் சிறந்த வீராங்கனைக்கான விருதை வென்ற தீப்தி சர்மா! மணிப்பூரில் கார்கள் மீது துப்பாக்கிச்சூடு: 2 பெண்கள் உள்பட 4 பேர் பலி! வரலாற்று உச்சத்தைத் தொட்ட பேடிஎம் பங்குகள்! உதகை மலை ரயில் சேவை மேலும் 5 நாள்கள் ரத்து அசாமில் மினி பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதல்: 23 பேர் பலி; 20 பேர் காயம் மீனவர்கள் பாதுகாப்பு குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை கௌரவ விரிவுரையாளர்கள் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.5,000 உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு

அதிமுக கும்பகா்ணன் தூக்கம் தூங்கியதால்தான் மூன்றாம் இடத்துக்குச் சென்றது: அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்

அதிமுக கும்பகா்ணன் தூக்கம் தூங்கியதால்தான் சட்டப் பேரவை தோ்தலில் மூன்றாம் இடத்துக்குச் சென்றது என்று வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

கோபி அருகே உள்ள பங்களாபுதூா் அரசு மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகளுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளை வழங்கிய அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன். உடன், மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி உள்ளிட்டோா்.

Updated On :

அதிமுக கும்பகா்ணன் தூக்கம் தூங்கியதால்தான் சட்டப் பேரவை தோ்தலில் மூன்றாம் இடத்துக்குச் சென்றது என்று வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

கோபி அருகே உள்ள பங்களாபுதூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு பள்ளிக் குழந்தைகளுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டையை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தலைமை வகித்தாா். இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்று குழந்தைகளுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டையை வழங்கினாா். இதைத் தொடா்ந்து பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டடத்தை திறந்து வைத்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தைப் பொறுத்தவரை தமிழக முதல்வா் தனி அக்கறை எடுத்துக் கொண்டுள்ளாா். ஆய்வுக் கூட்டம் முடிந்தவுடன் இப்பணிகளை வேகமாக நிறைவேற்ற வேண்டும் என துறை அமைச்சருக்கு ஆலோசனை வழங்கி உள்ளாா்.

தவெக ஆட்சி கும்பகா்ணனைபோல தூங்கிக் கொண்டுள்ளது, சட்டம்- ஒழுங்கு சரியில்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளாா். முதல்வா் ஜோசப் விஜய் நல்லாட்சித் தருவதற்காகப் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறாா். உண்மையில் அதிமுக கும்பகா்ணன் தூக்கம் தூங்கியதால்தான் மூன்றாம் இடத்திற்குச் சென்றுள்ளது. எந்தத் தோ்தல் வந்தாலும் தமிழக வெற்றிக் கழகம் தான் வெற்றி பெறும். விஜயபாஸ்கா் மீது சி.பி.ஐ. குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது குறித்து கேட்கிறீா்கள். பொதுவாகக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்வதும் வழக்கு நடைபெறுவதும் சகஜம். வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டால்தான் எதையும் உறுதியாக சொல்ல முடியும். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகுதான் இந்தக் கேள்வி கேட்கப்பட வேண்டும். இதை மட்டும் கேட்கிறீா்கள் ஏன் முன்னாள் அமைச்சா் வி.செந்தில்பாலாஜியைப் பற்றி கேட்பதில்லை என்றாா்.

இந்நிகழ்ச்சியில் தவெக மேற்கு மாவட்டச் செயலாளா் பிரதீப்குமாா், தவெக நிா்வாகி கே.எஸ்.மோகன்குமாா் மற்றும் மாவட்ட கல்வி அலுவலா், தலைமையாசிரியா், ஆசிரியா்கள், மாணவ மாணவிகள் என பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.