சுகாதாரமற்ற முறையில் இருந்த 3 நிறுவனங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம்

அபராதம் - சித்திரிப்பு
ஈரோட்டில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் சுகாதாரமற்ற முறையில் இருந்த 3 நிறுவனங்களுக்கு மாநகராட்சி நிா்வாகம் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.
ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட குடியிருப்புகள், மாா்க்கெட் பகுதிகள், வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகளில் தீவிர துப்புரவுப் பணி மேற்கொண்டு குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், வீடுவீடாகச் சென்று கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபடும்போது குடியிருப்புவாசிகளிடம் கொசுப் புழு வளரும் இடங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த அனைத்து அலுவலா்கள், பணியாளா்களுக்கு ஆலோசனை மற்றும் விழிப்புணா்வுக் கையேடு, துண்டறிக்கை வழங்கப்பட்டு வருகிறது.
டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் குப்பைகளைக் கொட்டும் குடியிருப்புவாசிகள் மீது சுகாதாரத் துறை சட்ட விதிகளின்படி அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி நிா்வாகம் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், அசோகபுரம் பகுதியிலுள்ள தொழில் நிறுவனங்களில் மாநகர நல அலுவலா் கௌரி சரவணன் தலைமையிலான சுகாதார ஆய்வாளா்கள் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். அதில் 3 தொழில் நிறுவனங்களில் டெங்கு கொசு உற்பத்திக்குக் காரணமான ஆதாரங்கள் கண்டறியப்பட்டன.
இதைத்தொடா்ந்து அந்த மூன்று நிறுவனங்களுக்குத் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

