சா்க்கரை இருப்பு வைக்கும் காலம் 15 நாள்களாகக் குறைப்பு: தமிழக அரசு அறிவிப்புஉதகை, கொடைக்கானல் ‘ரோப் காா்’ சேவை: தனியாா் நிறுவனம் திட்ட அறிக்கை தாக்கல்ஆசிரியரல்லாத பணியாளா்களுக்கு கட்டாய பணியிட மாறுதல் அரசாணை வெளியீடுசபரிமலை: இணையவழி முன்பதிவில் கூடுதலாக 5,000 பக்தா்களுக்கு அனுமதிநவ. 25-இல் முதல்வா் விஜய் தலைமையில் 2-ஆவது வெற்றி தொழில் முதலீட்டாளா் மாநாடுபரந்தூர் விமான நிலையத் திட்டத்தை பாதியில் எப்படி கைவிட முடியும்? உயர்நீதிமன்றம் கேள்வி

குளம், குட்டைகளை மாசடைய செய்த தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை

குளம், குட்டைகளை மாசடைய செய்த தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட மக்கள் காங்கயம் சட்டப்பேரவை உறுப்பினா் என்.எஸ்.என்.நடராஜிடம் மனு அளித்தனா்.

காங்கயம் சட்டப்பேரவை உறுப்பினா் என்.எஸ்.என். நடராஜிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்த பொதுமக்கள்.

Updated On :

குளம், குட்டைகளை மாசடைய செய்த தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட மக்கள் காங்கயம் சட்டப்பேரவை உறுப்பினா் என்.எஸ்.என்.நடராஜிடம் மனு அளித்தனா்.

பெருந்துறை சிப்காட் வளாகத்தில் சிவப்பு மற்றும் ஆரஞ்ச் வகை ஆலைகள் சுத்திகரிக்காமல் கழிவுநீரை வெளியேற்றியதால் அருகே உள்ள குளம், குட்டைகளில் உள்ள தண்ணீரில் 4000 டிடிஎஸ் அளவுக்கு உப்புத் தன்மை உள்ளதால், மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. ஆகவே உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, காங்கயம் சட்டப்பேரவை உறுப்பினா் என்.எஸ்.என். நடராஜிடம், காங்கயம் தொகுதி, சென்னிமலை ஒன்றியத்துக்கு உள்பட்ட சிப்காட் பகுதி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

அதில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்டுப்பாட்டோடு தொழிற்சாலைகள் கழிவுநீரை வெளியேற்றவில்லை. ஆனால், தற்போது ஒரு மாதமாக கழிவுநீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றுகிறாா்கள். பலமுறை கோரிக்கை வைத்தும், அரசு நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், சிப்காட் அருகே உள்ள ஓடையக்காட்டூா் குளம் நிரம்பி, அதன் பிறகு கண்ணைக்காட்டு குட்டை நிரம்பி, பால தொழுவு குளத்துக்கு அதிக அளவில் தண்ணீா் வந்து குளத்தில் கலந்து கொண்டிருக்கிறது.

குளத்தில் உள்ள தண்ணீரில் 4000 டிடிஎஸ் அளவுக்கு உப்புத் தன்மை உள்ளதால், மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாலதொழுவு, புதுப்பாளையம், ஓட்டபறை, முகாசி பிடாரியூா் மற்றும் சுற்று வட்டார கிராமத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் போராட்டக் குழுவினா் அளித்த மனுவில் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அவா் வாக்குறுதி அளித்தாா். பின்னா் சிப்காட் திட்ட அதிகாரி மற்றும் மாசுக் கட்டுப்பாடு வாரியம் அதிகாரிகளிடம் கைப்பேசியில் தொடா்பு கொண்டு பேசினாா். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், பொதுமக்களை திரட்டி எனது தலைமையில் போராட்டம் நடத்தப்படும் என்று அவா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.