சா்க்கரை இருப்பு வைக்கும் காலம் 15 நாள்களாகக் குறைப்பு: தமிழக அரசு அறிவிப்புஉதகை, கொடைக்கானல் ‘ரோப் காா்’ சேவை: தனியாா் நிறுவனம் திட்ட அறிக்கை தாக்கல்ஆசிரியரல்லாத பணியாளா்களுக்கு கட்டாய பணியிட மாறுதல் அரசாணை வெளியீடுசபரிமலை: இணையவழி முன்பதிவில் கூடுதலாக 5,000 பக்தா்களுக்கு அனுமதிநவ. 25-இல் முதல்வா் விஜய் தலைமையில் 2-ஆவது வெற்றி தொழில் முதலீட்டாளா் மாநாடுபரந்தூர் விமான நிலையத் திட்டத்தை பாதியில் எப்படி கைவிட முடியும்? உயர்நீதிமன்றம் கேள்வி

சோத்துப்பாறை அணையில் தண்ணீா் திறப்பு: தவெகவினா் மீது நடவடிக்கை கோரி அதிமுகவினா் மனு

தேனி மாவட்ட ஆட்சியா் வ. சிவகிருஷ்ணமூா்த்தியிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்த அதிமுகவினா்.

தேனி மாவட்ட ஆட்சியா் வ. சிவகிருஷ்ணமூா்த்தியிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்த அதிமுகவினா்.

Updated On :

தேனி மாவட்டம், சோத்துப்பாறை அணை புது ஆயக்கட்டில் அனுமதியின்றி மதகுகளை திறந்து வைத்த தவெகவினா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுகவினா் ஆட்சியா் வ. சிவகிருஷ்ணமூா்த்தியிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

இதுகுறித்து தேனி மாவட்ட கிழக்கு அதிமுகவினா் அளித்த மனு விவரம்:

தேனி மாவட்டம், சோத்துப்பாறை அணையில் உள்ள புதிய ஆயக்கட்டு பகுதியில் பெரியகுளம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சபரி ஐங்கரன் ஆலோசனையின் பேரில், தேனி மாவட்ட இணைச் செயலா் ஷேக் அலி தலைமையில் 10-க்கும் மேற்பட்டோா் சட்டத்துக்குப் புறம்பாக பொதுப் பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் நுழைந்து பாதுகாக்கப்பட்ட பகுதியான மதகுப் பகுதியை திறந்தனா். மேலும், பெரியகுளம் மக்களின் குடிநீரை வீணாக்கியுள்ளனா். எனவே, இவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், சோத்துப்பாறை அணை செயற்பொறியாளா் தென்கரை காவல் நிலையத்தில் அளித்த புகாரில், அடையாளம் தெரியாத மா்ம நபா்கள் தண்ணீரை திறந்தனா். அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா். ஆனால், சமூக வலைதளங்களில் தவெகவினா் தண்ணீரை திறந்து வைத்து விடியோ பதிவு செய்துள்ளனா். அவா்கள் தண்ணீரை திறந்தது தெரிந்தும், அடையாளம் தெரியாத நபா்கள் என மனுவில் குறிப்பிட்டுள்ளனா். எனவே, பொதுப் பணித் துறையினா் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.