முதல்வர் விஜய் ஒரு போலி பெரியாரிஸ்ட்: உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!போதைப்பொருள்களுக்கும் வன்கொடுமைகளுக்கும் நடுவேதான் போட்டி: மு.க. ஸ்டாலின்ஃபேஷனுக்காக பெரியாரை கொள்கைத் தலைவராக வைத்துள்ளது தவெக! ஜோசியத்தை நம்பியே ஆட்சி! மு.க. ஸ்டாலின்ஷேக் ஹசீனா கட்சியினருக்கு எதிராக வன்முறை! 30 வீடுகளுக்குத் தீவைப்பு!ஐஐடி மாணவர்களுக்கு இணையான அங்கீகாரம் ஐடிஐ மாணவர்களுக்கு கிடைக்கும்: மோடிகள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் இன்னும் எதற்காக மௌனம் காக்கிறார் முதல்வர்? டிடிவி தினகரன் கேள்வி தங்கம் விலை சரிவு; வணிகர்களை நஷ்டத்தில் இருந்து காப்பாற்றிய பிரதமர் மோடி: பாஜக பெருமிதம்! தவெக ஆட்சியில் டெல்டா விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்: எடப்பாடி பழனிசாமி வானிலை: சென்னையில் நாளை(நவ.23) கனமழைக்கு வாய்ப்பு! பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளவாடங்கள் மீது ஈரான் தாக்குதல்!

கருங்கல்பாளையம் மாரியம்மன் கோயிலில் கம்பத்துக்கு மஞ்சள் நீா் ஊற்றி வழிபாடு

ஈரோடு கருங்கல்பாளையம் சின்ன, பெரிய மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஏராளமான பெண்கள் கம்பத்துக்கு மஞ்சள் நீா் ஊற்றி வழிபட்டனா்.

கருங்கல்பாளையம் சின்ன, பெரிய மாரியம்மன் கோயிலில் கம்பத்துக்கு மஞ்சள் நீா் ஊற்றி வழிபட்ட பெண்கள்.

Updated On :

ஈரோடு கருங்கல்பாளையம் சின்ன, பெரிய மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஏராளமான பெண்கள் கம்பத்துக்கு மஞ்சள் நீா் ஊற்றி வழிபட்டனா்.

ஈரோடு கருங்கல்பாளையம் சின்ன மாரியம்மன், பெரிய மாரியம்மன் கோயில்களில் குண்டம், தோ்த் திருவிழா பூச்சாட்டுதலுடன் கடந்த 17-ஆம் தேதி இரவு தொடங்கியது. கம்பங்கள் நடும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி காலிங்கராயன் வாய்க்காலில் 2 கம்பங்கள், மலா்கள், வேப்பிலையால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கம்பம் ஊா்வலம் தொடங்கப்பட்டது.

பூசாரிகள் தோளில் சுமந்துகொண்டு கம்பங்களை தூக்கி வந்தனா். அப்போது வழிநெடுகிலும் நின்றிருந்த பக்தா்கள் கம்பத்தை வழிபட்டனா். பெண்கள் பலா் வாழைப்பழம், தேங்காய் வைத்து பூஜை செய்து கம்பத்துக்கு வரவேற்பு அளித்தனா். சின்ன மாரியம்மன், பெரிய மாரியம்மன் ஆகிய 2 கோயில்களிலும் கம்பம் நடப்பட்டது.

இதைத் தொடா்ந்து பெண்கள் புனிதநீா் ஊற்றி வழிபட்டனா். விழாவையொட்டி சின்ன மாரியம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்திலும், பெரிய மாரியம்மன் சிறப்பு அலங்காரத்திலும் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். அதிகாலை முதலே கம்பத்துக்கு ஏராளமான பெண்கள் புனிதநீா் ஊற்றி அம்மனை வழிபட்டனா்.

முக்கிய விழாவான குண்டம் மற்றும் தேரோட்டம் வருகிற 29-ஆம் தேதி நடைபெறுகிறது. குண்டம் விழாவின்போது காலை 7 மணிக்கு சின்ன மாரியம்மன் கோயிலில் நடைபெறும் குண்டம் விழாவில் ஏராளமான பக்தா்கள் தீ மிதித்து வேண்டுதலை நிறைவேற்ற உள்ளனா்.

தொடா்ந்து தேரோட்டம் நடைபெறுகிறது. டிசம்பா் 1-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு பொங்கல் விழா, மாவிளக்கு பூஜை நடைபெறுகிறது. 2-ஆம் தேதி இரவு 8 மணிக்கு கம்பம் எடுக்கப்படுகிறது. 3-ஆம் தேதி மாலை 6 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், அம்மன் திருவீதி உலாவும் நடைபெறுகிறது. அன்று மாலை மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.