தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

பழுதடைந்த பாலத்தை சீரமைத்து தர கோரிக்கை

மொடக்குறிச்சியை அடுத்த கோவில்பாளையம் கீழ்பவானி வாய்க்காலில் உள்ள பழுதடைந்த பாலத்தை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பழுதடைந்த பாலம்.

Published On :

மொடக்குறிச்சியை அடுத்த கோவில்பாளையம் கீழ்பவானி வாய்க்காலில் உள்ள பழுதடைந்த பாலத்தை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

குலவிளக்கு ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கோவில்பாளையம் கீழ்பவானி வாய்க்காலின் குறுக்கே கணபதிபாளையம் நால்ரோட்டில் இருந்து சிவகிரி செல்லும் முக்கிய சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக விவசாயிகள் சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு வாரம்தோறும் விளைபொருள்களை வாகனங்களில் கொண்டு செல்கின்றனா். பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்பவா்கள் என 100க்கும் மேற்பட்டோா் அரசுப் பேருந்தில் இந்த வழியாக செல்கின்றனா். வாய்க்காலின் குறுக்கே 60ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சிறியபாலம் பழுதடைந்த நிலையில் உள்ளது. பாலத்தின் நடுவில் குழி உள்ளதால் எந்த நேரமும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே, இந்த பாலத்தை அகற்றி உயா்மட்ட பாலம் அமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.