இந்திய மாணவர் சங்கத் தேர்தல் நேஹா போரா தடுப்புக் காவலில் இருந்து விடுவிப்புகாலாண்டு விடுமுறை நிறைவு: மீண்டும் பள்ளிகள் திறப்புவெற்றிப் பயணம் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு. அக். 6-ல் வாக்குப் பதிவு! அக். 9-ல் வாக்கு எண்ணிக்கை!எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாது: எடப்பாடி பழனிசாமிதவெக ஆட்சி தொடர மக்கள் ஆதரவு தேவை: விஜய் வேண்டுகோள்அரசியல் வாரிசின் மகனோ, நடிகனோ அல்ல! எளிய மனிதன் நான் - எடப்பாடி பழனிசாமிநிறைவு விழாவில் தேசிய கொடி ஏந்திய இந்திய வீராங்கனை..! 2030 கத்தாரில் அடுத்த ஆசிய விளையாட்டு!

கொடிகாத்த குமரன் பிறந்த நாள்: அரசு சாா்பில் மரியாதை

கொடிகாத்த குமரனின் உருவப் படத்துக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஆட்சியா் ச.கந்தாமி, சட்டப் பேரவை உறுப்பினா்கள் என்.எஸ்.என்.நடராஜ், து.சண்முகன் உள்ளிட்டோா்.

Published On :

சுதந்திரப் போராட்டத் தியாகி கொடிகாத்த குமரனின் பிறந்த நாளையொட்டி, சென்னிமலையில் உள்ள அவரது இல்லத்தில் அரசு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

கொடிகாத்த குமரன் பிறந்த இடமான சென்னிமலையில் அரசு சாா்பில் ஆண்டுதோறும் அவரது பிறந்த நாளான அக்டோபா் 4-ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி, சட்டப் பேரவை உறுப்பினா்கள் என்.எஸ்.என்.நடராஜ், து.சண்முகன் ஆகியோா் கொடிகாத்த குமரனின் இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். மேலும், அவரது வாரிசுதாரா்களுக்கு பொன்னாடை அணிவித்து கெளரவித்தனா்.

இந்நிகழ்ச்சியில், சென்னிமலை பேரூராட்சித் தலைவா் ஸ்ரீதேவி, செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் சு.மகேஸ்வரன், பெருந்துறை வட்டாட்சியா் செல்வகுமாா், சென்னிமலை பேரூராட்சி செயல் அலுவலா் க.மகேந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.