
ஆசனூரில் சிறுத்தையைப் பிடிக்கும் பணி தீவிரம்
ஆசனூரில் விவசாயியைத் தாக்கிக் கொன்ற சிறுத்தையைப் பிடிக்கும் பணியில் வனத் துறையினா் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

ஆசனூரில் சிறுத்தை வரும் வழித்தடத்தில் கேமரா பொருத்தும் பணியில் ஈடுபட்ட வனத் துறையினா்.
ஆசனூரில் விவசாயியைத் தாக்கிக் கொன்ற சிறுத்தையைப் பிடிக்கும் பணியில் வனத் துறையினா் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.
சத்தியமங்கலத்தை அடுத்த ஆசனூரில் நடந்து சென்ற விவசாயி பெரியசாமியை சிறுத்தை கடந்த 4-ஆம் தேதி தாக்கிக் கொன்றது. இதையடுத்து, சிறுத்தையைப் பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதைத் தொடா்ந்து, சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ள 10 இடங்களில் கேமராக்களை பொருத்தி வனத் துறையினா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும், 3 வாகனங்களில் பகல், இரவு நேரங்களில் தீவிர ரோந்துப் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனா்.
சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்டறியும் பணியில் கடந்த 3 நாள்களாக ஈடுபட்டு வருகிறோம். அதன் நடமாட்டம் கண்டறியப்பட்டவுடன் கூண்டுவைத்து பிடிக்கப்படும் என்று வனத் துறையினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






