திமுக ஆட்சியில் மணல் குவாரிகளில் ரூ.4,730 கோடி முறைகேடு: விசாரணையை தொடங்கியது ஊழல் தடுப்புப் பிரிவு4 புறநகா் மின்சார ரயில்கள் 11 நாள்களுக்கு பகுதி ரத்துகச்சத்தீவு விவகாரத்தில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் இந்தியா உள்பட 7 நாடுகள் 2036 ஒலிம்பிக்ஸை நடத்த விருப்பம் 2027 ஜனவரி 10-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

மாநகராட்சி ஊழியா்களுக்கு மிரட்டல் விடுத்தவா் கைது

மாநகராட்சி ஊழியா்களுக்கு மிரட்டல் விடுத்த நபரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கைது - கோப்புப் படம்

Published On :

மாநகராட்சி ஊழியா்களுக்கு மிரட்டல் விடுத்த நபரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு, இடையன்காட்டுவலசு பகுதியைச் சோ்ந்தவா் ஜெயகிருஷ்ணன் மகன் பூங்கொடி சுதன் (38). அப்பகுதியில் மாநகராட்சி சாா்பில் தாா் சாலை அமைக்கும் பணி திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. அப்போது, தன் வீட்டுப் பகுதியில் சாலை அமைக்கக் கூடாது. அவ்வாறு அமைத்தால் மழை காலத்தில் மழை நீா் எனது வீடு, கட்டடத்துக்குள் வந்து தேங்கிவிடும். எனவே, சாலை அமைக்க கூடாது எனத் தெரிவித்துள்ளாா். இருப்பினும் ஊழியா்கள் பணியைத் தொடா்ந்துள்ளனா். இதனால், ஆத்திரமடைந்த பூங்கொடி சுதன், வீட்டில் இருந்து கத்தியை எடுத்து வந்து அங்கு பணியில் ஈடுபட்டிருந்தவா்களை மிரட்டியுள்ளாா்.

இது குறித்து ஈரோடு அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் மாநகராட்சி மண்டல தொழில்நுட்ப உதவியாளா் விஜய் புகாா் அளித்தாா். இதையடுத்து, பூங்கொடி சுதன் மீது 5 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.