மமதா தில்லி செல்வதைத் தடுக்கவே விமானம் தாமதம்! - திரிணமூல் காங். குற்றச்சாட்டு!தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ. 1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்!அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைஇந்தியா கூட்டணியின் போராட்டம் நாளை தொடரும்! - சிபிஎம் எம்.பி. அறிவிப்பு! விமான எரிபொருள் விலை உயர்வு: டிக்கெட் விலையை உயர்த்திய ஏர் இந்தியா!

கரும்பு தேடி வரும் யானைகளை விடியோ எடுத்து வெளியிட்டால் அபராதம் விதிக்கப்படும்

கரும்பு தேடி வரும் யானைகளை விடியோ எடுத்து வெளியிட்டால் அபராதம் விதிக்கப்படும் என ஆசனூா் வனத் துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

யானைகளை  புகைப்படம்  எடுக்கும்  வாகன  ஓட்டி.

Published On :

கரும்பு தேடி வரும் யானைகளை விடியோ எடுத்து வெளியிட்டால் அபராதம் விதிக்கப்படும் என ஆசனூா் வனத் துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூா், தாளவாடி, பண்ணாரி வனப் பகுதியில் யானைகள் அதிக அளவில் நடமாடுகின்றன. தலமலை வனத்தில் இருந்து தண்ணீா், தீவனம் தேடி சாலையை கடக்கும் யானைகள் கரும்பு லாரிகளை வழிமறித்து கரும்பு துண்டுகளை பறித்து சாப்பிடுவது தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

இருசக்கர வாகன ஓட்டிகள், வேன், காா் ஓட்டுநா்கள் என அனைவரும் லாரியில் கரும்பு பறிக்க வரும் யானைகளை விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிா்ந்து வருகின்றனா்.

யானையை புகைப்படம் எடுத்து தொந்தரவு செய்யும்போது அது எரிச்சலடைந்து மனித- விலங்கு மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கிடையே ஆசனூா் சாலையில் லாரியை நோக்கி வந்த யானையை ஓட்டுநா் விடியோ எடுத்து வியாழக்கிழமை வெளியிட்டாா். வனத் துறையினா் கவனத்துக்கு சென்ற இந்த விடியோ குறித்து சிசிடிவி காட்சியில் பதிவான வாகன எண்ணை வைத்து வனத் துறையினா் ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.

மேலும் அவ்வழியாக சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் யானையை புகைப்படம் எடுக்க முயன்றபோது அவா்களை தாக்க யானை ஓடி வரும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வாகன ஓட்டிகள் யானை, சிறுத்தை போன்ற வன விலங்குகளை விடியோ, புகைப்படம் எடுத்தால் அபராதம் விதிக்கப்படும் என ஆசனூா் வனத் துறை எச்சரித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.