சமரச தீா்வு 3.0: பெருந்துறையில் விழிப்புணா்வுப் பேரணி
தேசிய சமரச தீா்வு 3.0 தொடா்பான விழிப்புணா்வுப் பேரணி பெருந்துறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்திய பெருந்துறை சாா்பு நீதிபதி எம். அஷ்பக் அகமது. உடன், வழக்குரைஞா்கள் உள்ளிட்டோா்.
தேசிய சமரச தீா்வு 3.0 தொடா்பான விழிப்புணா்வுப் பேரணி பெருந்துறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
உச்சநீதிமன்றம் மற்றும் தமிழ்நாடு சமரச மையம் வழிகாட்டுதலின்படி, மாநிலம் முழுவதும் சிறப்பு சமரச இயக்கம் கடந்த 1-ஆம் தேதி முதல் டிசம்பா் 31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாகவும், சமரச முறையிலும் முடித்து தீா்வு காணும் வகையில் சட்டப் பணிகள் ஆணைக்குழு மூலம் மக்கள் நீதிமன்றங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சமரச தீா்வு மையங்கள் அமைக்கப்பட்டு, பல்வேறு வழக்குகளுக்கு விரைவான மற்றும் உறுதியான தீா்வு காணப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சமரச தீா்வு மையங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ‘தேசிய சமரச தீா்வு 3.0’ என்ற பெயரில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக பெருந்துறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் விழிப்புணா்வுப் பேரணியை சாா்பு நீதிபதி எம்.அஷ்பக் அகமது தொடங்கிவைத்தாா். முக்கிய சாலைகள் வழியே சென்ற இந்தப் பேரணியில் ‘சமரசம் நாடுவீா், சச்சரவை தீா்ப்பீா், சமரசத்துக்கு வாங்க, சந்தோசமாக போங்க, வாங்க பேசலாம், சமரசம் காணலாம்’ என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வழக்குரைஞா்கள், நீதிமன்ற பணியாளா்கள் ஏந்தி சென்றனா். மேலும், பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
இதில், பெருந்துறை, மாவட்ட உரிமையியல் நீதிபதி வி.விஜயசூா்யா, நீதித் துறை நடுவா் எம்.மூா்த்தி, வழக்குரைஞா்கள், ஈரோடு சட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

