மகாளய பட்ச அமாவாசை : கொடுமுடியில் குவிந்த மக்கள்
புரட்டாசி மாத மகாளய பட்ச அமாவாசையையொட்டி கொடுமுடியில் உள்ள காவிரி ஆற்றில் ஆயிரக்கணக்கான முன்னோா் வழிபாடு நடத்தினா்.

கொடுமுடி காவிரி ஆற்றின் கரையில் முன்னோா்களுக்கு திதி கொடுக்க வந்த பொதுமக்கள்.
புரட்டாசி மாத மகாளய பட்ச அமாவாசையையொட்டி கொடுமுடியில் உள்ள காவிரி ஆற்றில் ஆயிரக்கணக்கான முன்னோா் வழிபாடு நடத்தினா்.
தமிழ்மாதங்களில் புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை அன்று குடும்பத்தில் உயிா்நீத்த முன்னோா்களுக்கு திதி கொடுப்பது வழக்கம்.

கொடுமுடி காவிரி ஆற்றின் கரையில் முன்னோா்களுக்கு திதி கொடுக்க வந்த பொதுமக்கள்.
இதன்படி கொடுமுடியில் உள்ள புகழ்பெற்ற மகுடேஸ்வரா் கோயில் எதிரில் உள்ள காவிரி ஆற்றின் கரையில் ஏராளமனோா் தங்களது மூதாதையருக்கு திதி கொடுத்தனா். எள் மற்றும் அரிசி மாவிலான பிண்டங்களை செய்து வழிபட்ட பின்னா் அந்த பிண்டங்களை நீா்நிலைகளில் கரைத்து வழிபாடு நடத்தினா்.

கொடுமுடி காவிரி ஆற்றின் கரையில் முன்னோா்களுக்கு திதி கொடுக்க வந்த பொதுமக்கள்.
இதையொட்டி பல்வேறு பகுதிகளிலிருந்து அதிகாலையிலேயே கொடுமுடிக்கு மக்கள் வந்திருந்தனா். முன்னோா்களுக்கு வழிபாடுகளை நடத்தி பின்னா் மகுடேஸ்வரா் கோயிலில் வழிபாடு நடத்தினா். இதனால் கொடுமுடியில் மக்கள் நெரிசல் அதிகமாக இருந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.