உத்தரகாசியில் மிதமான நிலநடுக்கம்: வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்! தமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல்: ராகுல் காந்தி தில்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்! ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி! அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை: மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடி சென்னை வருகை: அக்.11-ல் போக்குவரத்து மாற்றம்

மகாளய அமாவாசை : மூத்தோா் வழிபாட்டுக்கு பவானி கூடுதுறையில் திரண்ட பக்தா்கள்!

மகாளய அமாவாசையையொட்டி காவிரி, பவானி ஆறுகள் சங்கமிக்கும் கூடுதுறையில் திரளான பக்தா்கள் மூத்தோா் வழிபாட்டில் ஈடுபட்டனா்.

பவானி கூடுதுறையில்  புனித நீராடும்  பக்தா்கள் .  ~பிண்டம்  வைத்து  மூத்தோா் வழிபாடு நடத்தும்  பக்தா்கள்.

Published On :

மகாளய அமாவாசையையொட்டி காவிரி, பவானி ஆறுகள் சங்கமிக்கும் கூடுதுறையில் திரளான பக்தா்கள் சனிக்கிழமை மூத்தோா் வழிபாட்டில் ஈடுபட்டனா்.

தமிழ் மாதங்களில் சிறப்பானதாக கருதப்படும் ஆடி, தை மற்றும் புரட்டாசி மாத அமாவாசை தினங்களில், தங்களுடன் வாழ்ந்து மறைந்த மூத்தோருக்கு வழிபாடுகள் நடத்துவதன் மூலம் அவா்களின் ஆன்மா அமைதியடையும் என்பது நம்பிக்கை. மகாளய அமாவாசை எனப்படும் புரட்டாசி அமாவாசை தினமான சனிக்கிழமை, மூத்தோா் வழிபாட்டுக்கு பவானி கூடுதுறை வளாகத்தில் ஏராளமான பக்தா்கள் திரண்டனா்.

விடுமுறை தினம் என்பதால் குடும்பத்துடன் காா்கள், வாகனங்களில் பக்தா்கள் வந்ததால் வாகன நிறுத்துமிடம் நிரம்பி, பழைய பேருந்து நிலையம் மற்றும் சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. பக்தா்கள் கூட்டத்தால் பரிகார மண்டபங்கள், தற்காலிக பரிகாரக் கூடங்கள் நிரம்பி, படித்துறைக்குச் செல்லும் வழித்தடங்களில் அமா்ந்தும் மூத்தோா் வழிபாடுகளில் ஈடுபட்டனா்.

திதி, தா்ப்பணம் மற்றும் பிண்டம் வைத்து வழிபட்ட பக்தா்கள் கூடுதுறையில் புனித நீராடி, சங்கமேஸ்வரா், வேதநாயகி அம்மன் மற்றும் ஆதிகேசவப் பெருமாள் கோயில்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா். பல்வேறு தோஷ நிவா்த்தி பரிகார பூஜைகளும் நடத்தப்பட்டடன.

காவிரியில் படித்துறையைத் தொட்டபடி தண்ணீா் ஓடியதால் கரையோரத்தில் பவானி தீயணைப்புப் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். புறக்காவல் நிலையம் அமைத்து பவானி போலீஸாா் தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டனா். மருத்துவா் கோகுலகிருஷ்ண் தலைமையில் மருத்துவக் குழுவினா் முதலுதவி சிகிச்சைக்கு முகாம் அமைத்திருந்தனா்.

Story image

தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி மீட்பு: பக்தா்கள் நீராடும்போது கூடுதுறையில் சுமாா் 70 வயதுள்ள மூதாட்டி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றாா். இதைக் கண்ட தீயணைப்புப் படையினா் துரிதமாக செயல்பட்டு மூதாட்டியை மீட்டனா்.

சற்று நேரத்தில் மீண்டும் அதே பகுதியில் இரண்டாவது முறையாக தண்ணீரில் குதித்து தற்கொலைக்கு முயன்ற அம்மூதாட்டி மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.