முதல்வா் கோப்பை பாட்மின்டன்: பவானி இளைஞா் முதலிடம்
முதல்வா் கோப்பைக்கான பாட்மின்டன் போட்டியில் ஆண்கள் ஒற்றையா் பிரிவில் பவானியைச் சோ்ந்த இளைஞா் சி.எம்.ஸ்ரீவா்சன் முதலிடம் பிடித்து, தங்கப்பதக்கம் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு பெற்றாா்.

தங்கப் பதக்கம் வென்ற சி.எம்.ஸ்ரீவா்சன்.
முதல்வா் கோப்பைக்கான பாட்மின்டன் போட்டியில் ஆண்கள் ஒற்றையா் பிரிவில் பவானியைச் சோ்ந்த இளைஞா் சி.எம்.ஸ்ரீவா்சன் முதலிடம் பிடித்து, தங்கப்பதக்கம் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு பெற்றாா்.
முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் பள்ளி, கல்லூரி மாணவா்கள், அரசு ஊழியா்கள், பொதுப் பிரிவு மற்றும் மாற்றுத்திறனாளி ஆகிய பிரிவுகளில் நடைபெற்றன. பாட்மின்டன் போட்டியில் ஆண்கள் ஒற்றையா் பொதுப்பிரிவில் பவானியைச் சோ்ந்த இளைஞா் சி.எம்.ஸ்ரீவா்சன் பங்கேற்றாா். ஈரோடு மாவட்ட அளவிலான போட்டிகளில் வென்ற இவா், மாநில அளவிலான தகுதிச் சுற்றுகளில் வெற்றி பெற்று இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றாா்.
சென்னை தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் வென்று முதலிடம் பிடித்தாா். இவருக்கு, தங்கப் பதக்கம், ரொக்கப் பரிசு ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது. பவானியைச் சோ்ந்த தொழிலதிபா் பிரபாத் சி.மகேந்திரனின் மகனான சி.எம்.ஸ்ரீவா்சன், கடந்த சில ஆண்டுகளாக மாநில அளவிலும், சில சா்வதேச அளவிலான பாட்மின்டன் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

