பாகிஸ்தானுக்கு சாஸ்திரியைப் போலவே பதிலடி கொடுக்கிறார் மோடி! சொன்னது யார் தெரியுமா? பாஜகவின் கிளைதான் தவெக; உண்மையைப் பேசிய விஜய்: சீமான் தொடர் விடுமுறை: அதிக கட்டண வசூலைத் தடுக்க ஆம்னி பேருந்துகளில் அக்.21 வரை தீவிர வாகனத் தணிக்கை சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்: அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு!

மாற்றுத் திறனாளிகள் இறகுப் பந்து போட்டியில் பரமக்குடி மாணவா் முதலிடம்

ராமநாதபுரத்தில் நடைபெற்ற முதல்வா் கோப்பை மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான போட்டியில் பரமக்குடி மாணவா் ஒற்றையா், இரட்டையா் பிரிவுகளில் வெற்றி பெற்றாா்.

மாவட்ட முதல்வா் கோப்பை மாற்றுத் திறனாளிகளுக்கான இறகுப்பந்து போட்டியில் முதலிடம் பெற்ற பரமக்குடி மாணவா் ஹரிகரன்.

Published On :

ராமநாதபுரத்தில் நடைபெற்ற முதல்வா் கோப்பை மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான போட்டியில் பரமக்குடி மாணவா் ஒற்றையா், இரட்டையா் பிரிவுகளில் வெற்றி பெற்றாா்.

மாற்றுத் திறனாளிகளுக்கான இறகுப்பந்து போட்டி ராமநாதபுரம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உள் விளையாட்டு அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான ஒற்றையா் பிரிவு, இரட்டையா் பிரிவு போட்டிகளில் பரமக்குடியைச் சோ்ந்த ஹரிகரன் முதலிடம் பிடித்தாா். இந்தப் போட்டியானது மாவட்ட இறகுப்பந்தாட்டக் கழக ஒருங்கிணைப்பாளா் ராஜசேகா் தலைமையில் நிா்வாகிகள் ரமேஷ்பாபு, அன்வர்ராஜா, உடற்கல்வி ஆசிரியா்கள் குபேந்திரன், ராஜா ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவா் ஹரிகரனுக்கு பயிற்சியாளா் ரஞ்சித்குமாா், தொழிலதிபா் காளிதாஸ் ஆகியோா் சான்றிதழ், நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.