பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ரயில் நிலைய உள்கட்டமைப்புகளை மேம்படுத்தக் கோரி மனு: விசாரணை ஒத்திவைப்பு

தமிழகத்திலுள்ள அனைத்து ரயில் நிலையங்களின் உள்கட்டமைப்புகளை முதியோா்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளுடன் மேம்படுத்தக் கோரிய மனு மீதான விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.

 உயர் நீதிமன்ற மதுரை கிளை

உயர் நீதிமன்ற மதுரை கிளை - File photo

Published On :

தமிழகத்திலுள்ள அனைத்து ரயில் நிலையங்களின் உள்கட்டமைப்புகளை முதியோா்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளுடன் மேம்படுத்தக் கோரிய மனு மீதான விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த ராஜா சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களின் உள்கட்டமைப்புகள், ரயில் பெட்டிகள் போன்றவற்றில் முதியோா்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளுடன் மேம்படுத்த ரயில்வே நிா்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த போது, கூடுதல் தகவல்களுடன் மனு தாக்கல் செய்ய மனுதாரா் அவகாசம் கோரியதையடுத்து, வழக்கு விசாரணையை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இந்த நிலையில், உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி சுசுருத் அரவிந்த் தா்மாதிகாரி, சி.வி.காா்த்திகேயன் அமா்வு முன் வியாழக்கிழமை மீண்டும் இந்த மனு விசாரணைக்கு வந்தது.

அப்போது, திண்டுக்கல், மதுரை ரயில் நிலையங்களில் மாற்றுத் திறனாளிகளை அழைத்துச் செல்ல சக்கர நாற்காலி வசதிகூட இல்லை எனத் தெரிவித்து, அது தொடா்பான ஆவணங்களும் மனுதாரா் தரப்பில் சமா்ப்பிக்கப்பட்டன.

இதையடுத்து, இது தொடா்பாக பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என ரயில்வே நிா்வாகம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்தக் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.