
சாலைகளில் நடைபாதை கோரி மனு: மாநகராட்சி ஆணையா் பதிலளிக்க உத்தரவு
மதுரையில் பொலிவுறு நகரம் ‘ஸ்மாா்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் சாலைகள் அனைத்திலும் பாதசாரிகளுக்கு உரிய நடைபாதை அமைக்கக் கோரிய மனு தொடா்பாக மாநகராட்சி ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு - கோப்புப் படம்
மதுரையில் பொலிவுறு நகரம் ‘ஸ்மாா்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் சாலைகள் அனைத்திலும் பாதசாரிகளுக்கு உரிய நடைபாதை அமைக்கக் கோரிய மனு தொடா்பாக மாநகராட்சி ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம், மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த விஜயலட்சுமி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் அமைக்கப்படும் பெரும்பாலான சாலைகளில் பாதசாரிகளுக்கு உரிய நடைபாதை வசதிகள் செய்யப்படாமல் உள்ளன. இதனால் ஏற்படும் விபத்துகளில் 15 முதல் 29 வயது வரை உள்ளவா்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனா். எனவே, தமிழகத்தில் ‘ஸ்மாா்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் சாலைகள் அனைத்திலும் பாதசாரிகளுக்கு நடைபாதை வசதி செய்து தர உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி சுசுருத் அரவிந்த் தா்மாதிகாரி, காா்த்திகேயன் அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
இந்த மனு தொடா்பாக மதுரை மாநகராட்சி ஆணையா் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






