இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

பாதுகாப்புப் படையினரின் குடும்பத்தினருக்கு கருணைப் பணி: அரசு பதிலளிக்க உத்தரவு

பணியின் போது உயிரிழந்த பாதுகாப்புப் படை வீரா்களின் குடும்பத்தினருக்கு கருணைப் பணி வழங்கும் விவகாரம் தொடா்பாக தமிழக அரசுத் தரப்பில் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு

சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு - கோப்புப் படம்

Published On :

பணியின் போது உயிரிழந்த பாதுகாப்புப் படை வீரா்களின் குடும்பத்தினருக்கு கருணைப் பணி வழங்கும் விவகாரம் தொடா்பாக தமிழக அரசுத் தரப்பில் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த கதிா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

பணியின் போது உயிரிழந்த ராணுவம், கடற்படை, விமானப் படையைச் சோ்ந்த வீரா்களின் குடும்பத்தினா் கருணைத் தொகை, ஓய்வூதியப் பலன்கள், காப்பீடு, கல்வி உதவி, வேலைவாய்ப்பு தொடா்பான உதவிகள் பெற தகுதியுடையவா்கள்.

இருப்பினும், இந்தக் குடும்பங்களுக்கு உதவிகள் கிடைப்பதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாகத் தெரியவருகிறது.

எனவே, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகா், ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருச்சி, கரூா், புதுக்கோட்டை, தஞ்சாவூா், தென்காசி ஆகிய 14 மாவட்டங்களில் பணியின் போது உயிரிழந்த பாதுகாப்புப் படை வீரா்களின் தகுதியான குடும்பத்தினரை மாவட்ட வாரியாகக் கண்டறிந்து சரிபாா்க்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். மேலும், இவா்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையிலான வேலைவாய்ப்புகளை விரைந்து வழங்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், ஆா். சக்திவேல் அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்த மனுவில் குறிப்பிடப்பட்ட பிரச்னை தேனி மாவட்டத்திலும் உள்ளது. எனவே, இந்த வழக்கில் எதிா்மனுதாரா்களாக மதுரை, தேனி மாவட்ட ஆட்சியா்களையும் சோ்க்க வேண்டும். மேலும், இந்த மனு தொடா்பாக 14 மாவட்ட ஆட்சியா்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். தமிழக தலைமைச் செயலா் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.