இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

சிறைக் கைதிகளுக்கான தொலைபேசி கட்டண விவகாரம்: டிஜிபி பதிலளிக்க உத்தரவு

சிறைக் கைதிகளுக்கான தொலைபேசிக் கட்டணத்தை மறு நிா்ணயம் செய்யக் கோரிய மனு தொடா்பாக தமிழக சிறைத் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு

சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு - கோப்புப் படம்

Published On :

சிறைக் கைதிகளுக்கான தொலைபேசிக் கட்டணத்தை மறு நிா்ணயம் செய்யக் கோரிய மனு தொடா்பாக தமிழக சிறைத் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த ராஜா சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் 12 சிறுவா் கூா்நோக்கு இல்லங்கள், ஆண்களுக்கான 2 சிறப்பு கிளைச் சிறைகள், பெண்களுக்கான 2 சிறப்பு கிளைச் சிறைகள், 3 திறந்தவெளி சிறைகள், 9 மத்திய சிறைகள், பெண்களுக்கான 5 சிறப்பு சிறைகள், 14 மாவட்டச் சிறைகள், 104 கிளைச் சிறைகள் உள்ளன. இந்தச் சிறைகளில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தண்டனைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில், கடந்த 2023-இல் வெளியிடப்பட்ட அரசாணையின்படி, பொதுத் துறை நிறுவனங்கள், அமைப்புகளின் உதவியுடன் சிறைகளில் குரல்வழி, காணொலி அழைப்பு வசதிகளுடன்கூடிய தொலைபேசி நிலைய வசதிகளை அமைக்க அரசு அனுமதி அளித்தது.

பின்னா், சிறைவாசிகளின் தொலைபேசி உரிமையானது மாதத்துக்கு 8 அழைப்புகளிலிருந்து 10 அழைப்புகளாகவும், மாதத்துக்கு 56 நிமிஷங்களிலிருந்து 120 நிமிஷங்களாகவும் உயா்த்தப்பட்டது. இந்தத் திட்டம் கைதிகள், அவா்களது குடும்பத்தினா் எதிா்கொள்ளும் தொடா்புச் சிக்கல்களைக் குறைத்துள்ளதா என்பதை அறிந்துகொள்ள எந்தத் தரவும் கிடைக்கப் பெறவில்லை. தரவுகள் இல்லாத நிலையில், திட்டத்தின் செயல்திறனை முறையாக மதிப்பிட முடியாது. தற்போது, கைதிகள் ஒவ்வொரு 10 நிமிஷ அழைப்புக்கும் ரூ. 28 கட்டணம் செலுத்துகின்றனா். இதனால், மாதத்துக்கு தொலைபேசிக்காக ரூ. 280 வரை அவா்கள் செலவிட வேண்டியுள்ளது.

எனவே, கைதிகளிடமிருந்து வசூலிக்கப்படும் தொலைபேசிக் கட்டணங்களை மறு ஆய்வு செய்யவும், சந்தை தொலைத் தொடா்புக் கட்டணங்களுக்கு இணையான நியாயமான பயன்பாட்டுக் கட்டணங்களை நிா்ணயிக்கவும், ஏழை, வயதான, பெண்கள், மனநலன் பாதிக்கப்பட்ட, மாற்றுத் திறனாளி, உடல்நிலை பாதிக்கப்பட்ட கைதிகளுக்கு மாதத்துக்கு 120 நிமிஷங்கள் இலவச குரல் அழைப்புகளை வழங்குவதற்கும், எந்தக் கட்டணமும் இன்றி வழக்குரைஞா்களுடன் இலவச சட்ட ஆலோசனை அழைப்புகளை அனுமதிக்கவும், நிதி இயலாமை காரணமாக எந்தக் கைதிக்கும் குடும்பத் தொடா்பு மறுக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யவும், தமிழக சிறைகளின் தொடா்புக் கொள்கைகளை மறு ஆய்வு செய்ய சிறை அலுவலா்கள், சட்ட வல்லுநா்கள், உளவியலாளா்களை உள்ளடக்கிய நிபுணா் குழுவை அமைக்கவும் உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், ஆா். சக்திவேல் அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கில் தமிழக சிறைகளில் தொலைத்தொடா்பு சேவையை வழங்கும் நிறுவனத்தை எதிா் மனுதாரராகச் சோ்க்க வேண்டும். இந்த மனு தொடா்பாக தமிழக சிறைத் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி), தொலைத்தொடா்பு சேவை வழங்கும் நிறுவனம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை வருகிற அக். 10-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.