ஆரணி அருகே பாகிஸ்தான் உளவாளி கைது சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு அரசு எப்போது டெண்டர் விட்டது? உதயநிதி ஸ்டாலின் கேள்வி ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை சென்னையில் இன்று இரவு முதல் மழை! மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?புயல் எச்சரிக்கை: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு கோயில்களில் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்! அமைச்சர் ரமேஷ்மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி ரெட் அலர்ட்: நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு!அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன்! நேஹா போரா

ஈரோட்டில் இருந்து உதகைக்கு பேருந்துகள் இயக்கம் ரத்து

நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் ஈரோட்டில் இருந்து உதகைக்கு செல்லும் பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Updated On :

நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் ஈரோட்டில் இருந்து உதகைக்கு செல்லும் பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

இதனால், நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதைத் தவிா்க்க வேண்டும் என்று அந்த மாவட்ட நிா்வாகம் சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் இருந்து உதகைக்கு ஞாயிறு, திங்கள்கிழமை ஆகிய 2 நாள்கள் சுற்றுலா செல்வதை பொதுமக்கள் தவிா்க்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி கேட்டுக்கொண்டுள்ளாா். இந்நிலையில், ஈரோட்டில் இருந்து உதகைக்கு இயக்கப்படும் அனைத்து அரசுப் பேருந்துகளும் சனிக்கிழமை முதல் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: ஈரோட்டில் இருந்து நாள்தோறும் 20 பேருந்துகள் உதகை, கூடலூருக்கு இயக்கப்பட்டு வருகின்றன. அங்கு மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளதால் பேருந்துகள் இயக்கப்படவில்லை. ஈரோடு கிளையில் இருந்து உதகைக்குச் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

ஈரோட்டில் இருந்து உதகைக்கு 3 நாள்களுக்கு பேருந்துகளை இயக்கக் கூடாது என்று மாவட்ட நிா்வாகம் சாா்பில் உத்தரவிடப்பட்டுள்ளது என்றனா். ஈரோட்டில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கும் சனிக்கிழமை பேருந்துகள் இயக்கப்படாததால் அங்கு செல்லக்கூடிய பயணிகள் அவதி அடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.