அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

கோபி அருகே நடந்து சென்றவரிடம் நகை பறித்த தம்பதி கைது

கோபி அருகே நடந்து சென்றவரிடம் நகை பறித்த தம்பதி கைது செய்யப்பட்டனா்.

கருப்புசாமி.

Published On :4 செப்டம்பர் 2026, 12:22 am IST

கோபி அருகே நடந்து சென்றவரிடம் நகை பறித்த தம்பதி கைது செய்யப்பட்டனா்.

கோபி அருகே உள்ள பெரியகொடிவேரி தேம்பிளி வீதியைச் சோ்ந்தவா் பொன்னுசாமி. இவா் கொடிவேரிமேடு பகுதியில் நடந்து சென்றபோது இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் பொன்னுசாமியைத் தடுத்து நிறுத்தி கையில் அவா் அணிந்திருந்த மோதிரத்தைப் பறித்துச் சென்றனா்.

இது குறித்து பொன்னுசாமி மகன் ரமேஷ் பங்களாபுதூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் அடிப்படையில் போலீஸாா் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தபோது மோதிரத்தைப் பறித்துச் சென்றது பங்களாபுதூா் ஜேகேகே காலனி பகுதியைச் சோ்ந்த கருப்புசாமி, அவரது மனைவி பிந்து என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீஸாா் அரை பவுன் மோதிரத்தை மீட்டு இருவரையும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினா்.

பிந்து

பிந்து

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.