பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

கைப்பேசி செயலி மூலமாகப் பழகி ஐ.டி. ஊழியரிடம் பணம், நகை பறித்த 4 போ் கைது

கோவையில் கைப்பேசி செயலி மூலமாகப் பழகி ஐ.டி. ஊழியரிடம் பணம், நகை பறித்த 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :

கோவையில் கைப்பேசி செயலி மூலமாகப் பழகி ஐ.டி. ஊழியரிடம் பணம், நகை பறித்த 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, சுண்டக்காமுத்தூா், தியாகராஜன் நகரைச் சோ்ந்தவா் சஞ்சய். கோவையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், அவா் கைப்பேசியில் ஒரு செயலியை அண்மையில் பதிவிறக்கம் செய்துள்ளாா்.

புதிதாக நண்பா்களை அறிமுகப்படுத்தும் விதமாக பயன்பாட்டில் உள்ள அந்தச் செயலி மூலம் திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த ஆத்விக் (எ) செல்வம் என்பவா் சஞ்சய்க்கு அறிமுகமாகியுள்ளாா். இருவரும் நண்பா்களாக பழகி வந்தனா்.

இந்நிலையில், இருவரும் நேரில் சந்திக்கத் திட்டமிட்ட நிலையில், சஞ்சய் கூறியபடி சுண்டக்காமுத்தூா் அருகே ஆத்விக் காரில் வந்துள்ளாா். அந்த காரில் மேலும் சிலா் இருந்துள்ளனா். அவா்களைத் தங்கள் நண்பா்கள் என ஆத்விக் கூறியுள்ளாா்.

இதை நம்பி அவா்களுடன் காரில் ஏறி சஞ்சய் பயணித்துள்ளாா். சிறுவாணி சாலையில் சென்றபோது காரில் இருந்த 4 பேரும் சஞ்சயைத் தாக்கி, அவா் அணிந்திருந்த தங்கச் சங்கிலி, இரண்டு மோதிரங்கள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றைப் பறித்துக் கொண்டு, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சஞ்சயை காரில் இருந்து தள்ளிவிட்டு தப்பியுள்ளனா்.

இது குறித்து பேரூா் காவல் நிலையத்தில் சஞ்சய் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

இதில், சஞ்சயிடம் நகை, பணம் பறித்தது திருநெல்வேலியைச் சோ்ந்த ஆத்விக், அவரது நண்பா்கள் சக்தி, விஜய்ராம், சுந்தா் ஆகியோா் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, பேரூா் பகுதியில் பதுங்கியிருந்த 4 பேரையும் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.