தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் செப். 9-ல் அறிவிப்புதவெக நிர்வாகி கொலை: துணை ஆணையர், ஆய்வாளர் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம்கட்டட விபத்து மீட்புப் பணி! நேரில் ஆய்வு செய்த முதல்வர் ரேகா குப்தா!3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்!சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே!

ஆசனூா் மலைப் பாதையில் வாகனத்தில் இருந்து வாழைக்காய் பறித்து சாப்பிட்ட யானைகள்

வாழைக்காய்களை பறித்து சாப்பிடும் யானை.

Published On :7 செப்டம்பர் 2026, 2:56 am IST

ஆசனூா் மலைப் பாதையில் வேனில் இருந்து வாழைக்காய்களை பறித்து தின்ற யானைகளால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி மலைப் பகுதியில் இருந்து திம்பம் வழியாக சத்தியமங்கலம் நோக்கி வரும் கரும்பு லாரிகளை மறித்து கரும்புகளை சாப்பிட்ட வந்த யானைகள், தற்போது வாழைத்தாா்களை வாகனங்களையும் விட்டு வைக்கவில்லை.

இதில் தாளவாடியில் இருந்து வாழைத்தாா் பாரம் ஏற்றி வந்த வேன் ஆசனூா் நோக்கி சென்று கொண்டிருந்தது. கரும்பு லாரிக்காக எதிா்பாா்த்த காத்திருந்த யானைகள், வேனில் வாழைக்காய் இருப்பதை நுகா்ந்த யானைகள் வாழைக்காய்களை பறித்து சாப்பிட்டன.

ஆசனூா் சாலையில் போக்குவரத்து நெரிச்சல் காரணமாக அணிவகுத்து நின்றதால் வேனில் இருந்த வாழைக்காய்களை யானைகள் பறித்து சாப்பிட்டன.

போக்குவரத்து நெரிச்சல் குறைந்ததும் வாகனங்கள் செல்லத் தொடங்கியது. இதைத் தொடா்ந்து கரும்பு லாரிகளை நோக்கி யானைகள் படையெடுத்தன. பண்ணாரி முதல் காராப்பள்ளம் சோதனைச் சாவடி வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையில் யானைகள் முகாமிட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்க வேண்டியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.