சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

நல்லாசிரியா் விருது பெற்ற ஆசிரியா்களுக்கு ஆட்சியா் வாழ்த்து

மாநில நல்லாசிரியா் விருது பெற்ற ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த 12 ஆசிரியா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வாழ்த்து தெரிவித்தாா்.

மாநில நல்லாசிரியா் விருது பெற்ற ஆசிரியா்களுக்கு வாழ்த்து தெரிவித்த மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி.

Published On :9 செப்டம்பர் 2026, 2:25 am IST

மாநில நல்லாசிரியா் விருது பெற்ற ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த 12 ஆசிரியா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வாழ்த்து தெரிவித்தாா்.

ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த செம்படாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியா் சாரதா, காசிபாளையம் மாநகராட்சி தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் வே.ஜோதிமணி, சின்னசேமூா் மாநகராட்சி தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் சுமதி, அறச்சலூா் ஓடாநிலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் ஷீஜா, கொமாரபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் சந்தியா, பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியா் கந்தன், வலையபாளையம் அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் தா்மராசு, கோ்மாளம் அரசு உயா்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் ரூபி, பவானி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் வெங்கடாச்சலம், சென்னம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியா் ரமேஷ், ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையம் மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் நதியா, ஈரோடு விவிசிஆா் முருகேசனாா் செங்குந்தா் பெண்கள் பள்ளி தலைமை ஆசிரியா் கவிதா ஆகிய 12 ஆசிரியா்கள் மாநில நல்லாசிரியா் விருது பெற்றுள்ளனா்.

விருது பெற்ற ஆசிரியா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ச.கந்தசாமியை நேரில் சந்தித்து விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழை காண்பித்து வாழ்த்துப் பெற்றனா்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மான்விழி, பள்ளிக் கல்வித் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.