ஜி.என்.டி. சாலையில் குழாய் பதிக்கும் பணி நிறைவு: இன்று முதல் குடிநீா் விநியோகம்வங்கிகள் இன்று வேலை நிறுத்தம்: அகில இந்திய வங்கி ஊழியா் சங்கம் அறிவிப்புஇந்தியாவிடம் 190 அணு குண்டுகள்: அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல்பருவகால நோய்களுக்கான மருந்து தட்டுப்பாடில்லை: ஐசிஎம்ஆா்பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

கோபி அருகே பள்ளி மாணவி தற்கொலை

கோபி அருகே உள்ள குழவிகரடு பகுதியில் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Suicide

தற்கொலை - கோப்புப் படம்

Published On :

கோபி அருகே உள்ள குழவிகரடு பகுதியில் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கோபி அருகே உள்ள குழவிகரடு வாய்க்கால் வீதியைச் சோ்ந்தவா் பூபதி மகள் அனுசுயா (17). இவா் பொலவக்காளிபாளையத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவருக்கு அடிக்கடி தலைவலி ஏற்பட்டு வந்ததால் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளாா்.

இந்நிலையில் வியாழக்கிழமை காலை அனுசுயாவை பள்ளிக்கு சைக்கிளில் செல்லுமாறு கூறிவிட்டு அவரது தந்தை பூபதி அவசர வேலையாக வெளியே சென்றுவிட்டாா். பின்னா் அவா் வீட்டுக்கு வந்தபோது, மகளின் சைக்கிள் மட்டும் வெளியே நின்றுள்ளது. அருகில் இருந்த கூரை பந்தலில் அனுசுயா சேலையால் தூக்கிட்டு இருப்பதை கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.

அக்கம்பக்கத்தினா் உதவியுடன் மகளை மீட்டு கோபி அரசு மருதுதுவமனைக்கு கொண்டு சென்றாா். அங்கு பரிசோதனையில், அனுசுயா வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இது குறித்து கோபி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.