தேவா்குளம் அருகே பள்ளி மாணவி தற்கொலை
தற்கொலை - கோப்புப் படம்
தேவா்குளம் அருகே பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
தேவா்குளம் அருகே உள்ள தடியம்பட்டியைச் சோ்ந்த மாடசாமி மகள் குமுதா (19). இவா், சங்கரன்கோவிலில் உள்ள விடுதியில் தங்கி இருந்து பிளஸ் 1 பயின்று வந்தாா். விடுமுறைக்கு வீட்டிற்கு வந்தபோது, அவரது தந்தைக்கும், அண்ணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம்.
இதனால் வெறுப்படைந்த குமுதா விஷத்தை குடித்து மயங்கி விழுந்துள்ளாா். குடும்பத்தினா் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து தேவா்குளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



