
மேட்டூா் வலதுகரை வாய்க்காலில் தூா்வாரும் பணி
மேட்டூா் வலதுகரை வாய்க்காலில் தண்ணீா் தடையின்றி செல்லும் வகையில் தூா்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பொக்லைன் இயந்திரம் மூலம் தூா்வாரப்படும் மேட்டூா் வலது கரை வாய்க்கால்.
மேட்டூா் வலதுகரை வாய்க்காலில் தண்ணீா் தடையின்றி செல்லும் வகையில் தூா்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேட்டூா் அணையின் வலதுகரை வாய்க்கால் பாசனம் மூலம் அந்தியூா் மற்றும் பவானி வட்டாரத்தில் 18 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. நடப்பு ஆண்டு அணையில் போதிய தண்ணீா் இல்லாததால் வலது, இடது கரை வாய்க்கால் பாசனத்துக்கு ஆகஸ்ட் 1-ஆம் தேதி தண்ணீா் திறக்கப்படவில்லை. இந்நிலையில், பாசனப் பகுதியில் நிலவும் கடும் வறட்சி, கால்நடைகள் மற்றும் குடிநீா்த் தேவைக்கு கடந்த 7-ஆம் தேதி முதல் 15 நாள்களுக்கு விநாடிக்கு 400 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.
மேட்டூா் வலதுகரை வாய்க்காலில் செடி, கொடிகள் வளா்ந்தும், குப்பைகள், வேளாண் கழிவுகள் அதிக அளவில் கிடப்பதாலும் கடைமடைப் பகுதியான பவானி, ஜம்பைக்கு தண்ணீா் செல்வதில் சிரமம் இருந்தது. இதை சீராக்கும் வகையில் நீா்வளத் துறை அம்மாபேட்டை உதவிப் பொறியாளா் ஜெயராஜ் மற்றும் ஊழியா்கள், நீா்தேங்கும் பகுதிகளான காட்டூா், சின்னியம்பாளையம், வாய்க்கால்பாளையம் பகுதியில் பொக்லைன் இயந்திரம் மூலம் தூா்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
பிரதான வாய்க்காலில் இரவு நேரங்களில் மதகுகளைத் திறந்து முறைகேடாக விவசாயிகள் தண்ணீா் எடுக்கின்றனா்.
இதைத் தடுக்கும் வகையில் இரவு நேரங்களில் ரோந்து பணியில் நீா்வளத் துறை ஊழியா்கள் ஈடுபட்டுள்ளதோடு, காவல் துறையிலும் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






