மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

சீரான குடிநீா் விநியோகம் கோரி வட்டார வளா்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்

தாளவாடியில் சீரான குடிநீா் விநியோகம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தாளவாடி வட்டார வளா்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்.

Published On :

தாளவாடியில் சீரான குடிநீா் விநியோகம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி ஊராட்சி, இரியபுரம் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் கடந்த 20 நாள்களாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லையாம். இது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால், ஆத்திரமடைந்த இரியபுரம் கிராமத்தைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக் குடங்களுடன் வட்டார வளா்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் வட்டார வளா்ச்சி அலுவலா் மஞ்சு பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

அப்போது, தாளவாடி மலைப் பகுதியில் மழை பெய்யாதால் நிலத்தடி நீா்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. புதிய ஆழ்துளைக் கிணறு அமைத்தாலும் தண்ணீா் வருவது இல்லை. எனவே, லாரி மூலம் குடிநீா் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்தாா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.