புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

மக்கள் நீதிமன்றம்: ரூ.28.91 கோடி மதிப்பிலான 1,831 வழக்குகளுக்குத் தீா்வு

ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் ரூ.28.91 கோடி மதிப்பிலான 1,831 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டது.

விபத்துக் காப்பீடு வழக்கில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத் தொகைக்கான காசோலையை வழங்குகிறாா் முதன்மை மாவட்ட நீதிபதி எஸ்.சமீனா.

Published On :

ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் ரூ.28.91 கோடி மதிப்பிலான 1,831 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டது.

நாடு முழுவதும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு உடனடி தீா்வு காணும் வகையில் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

அதன்படி, ஈரோடு சம்பத் நகா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமரச மையத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தை சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான எஸ்.சமீனா தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளா் ஸ்ரீவித்யா ஏற்பாடுகளை செய்திருந்தாா்.

மக்கள் நீதிமன்றத்தில் ஈரோடு மாவட்ட நீதிமன்றம் மற்றும் கோபி, சத்தியமங்கலம், பவானி, பெருந்துறை, கொடுமுடி, எழுமாத்தூா், அந்தியூா் ஆகிய 7 நீதிமன்றங்களில் சட்டப்பணிகள் ஆணைக்குழுக்களால் மொத்தம் 18 அமா்வுகளில் அனைத்து நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள 1,943 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதில் ரூ.28.91 கோடி மதிப்பிலான 1,831 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டது. மூன்று விபத்துக் காப்பீடு வழக்குகளில், பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ. 1.04 கோடிக்கான காசோலையையும், மற்றொரு குடும்பத்தினருக்கு ரூ.40.50 லட்சத்துக்கான காசோலையையும், மற்றொரு குடும்பத்தினருக்கு ரூ.24 லட்சத்துக்கான காசோலையையும் முதன்மை மாவட்ட நீதிபதி சமீனா வழங்கினாா்.

இதில் மாவட்ட நீதிபதிகள், சாா்பு நீதிபதிகள், உரிமையியல் நீதிபதிகள், நீதித் துறை நடுவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.