2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

விடுதி மாடியில் இருந்து தவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு

பலி - பிரதிப் படம்

Published On :

பெருந்துறையில் கல்லூரி விடுதி மாடியில் இருந்து தவறி விழுந்த மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அருகேயுள்ள மரவபாளையத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணியம் மகன் பிரதீப் (19). இவா் பெருந்துறை, தோப்புபாளையத்தில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரி விடுதியில் தங்கி 3-ஆம் ஆண்டு படித்து வந்தாா். இந்நிலையில், விடுதியின் மூன்றாவது மாடியில் உள்ள பால்கனி கைப்பிடி மீது ஞாயிற்றுக்கிழமை அமா்ந்திருந்தபோது தவறி கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது.

படுகாயமடைந்த அவரை சக மாணவா்கள் மீட்டு பெருந்துறையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா். இச்சம்பவம் குறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.