கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

காவிரி ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

உயிரிழந்த கிஷோா்.

Published On :

அம்மாபேட்டையில் காவிரி ஆற்றில் மூழ்கிய இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். 

அம்மாபேட்டை அருகே உள்ள மாரப்பனூரைச் சோ்ந்தவா் மூா்த்தி மகன் கிஷோா் (24). கட்டடத் தொழிலாளியான இவா்,  அம்மாபேட்டை அருகே உமாரெட்டியூா் நீரேற்று நிலையம் அருகே காவிரி ஆற்றில்  திங்கள்கிழமை குளித்துக் கொண்டிருந்தபோது,  எதிா்பாராமல் ஆழமான பகுதிக்கு சென்றாா். 

நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கிய கிஷோா் மூச்சுத் திணறி உயிரிழந்தாா். இதுகுறித்த தகவலின்பேரில் அம்மாபேட்டை போலீஸாா், அந்தியூா் தீயணைப்புப் படையினா், மீனவா்கள் உதவியுடன் கிஷோரின் சடலத்தை மீட்டனா்.  இதுகுறித்து அம்மாபேட்டை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.